ADVERTISEMENT
மும்பை:அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, அடுத்த ஆண்டில், 85ஐ தொடக்கூடும் என, பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துஉள்ளனர்.
அண்மைக் காலமாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டு வருகிறது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கியது, கச்சா எண்ணெய் விலை உயர்வு, வினியோகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் ஆகியவை காரணமாக, ரூபாய் பயங்கரமான அழுத்தத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, கடந்த அக்டோபர் 19ம் தேதியன்று, இதுவரை இல்லாத அளவுக்கு, 83 ரூபாயாக கடும் சரிவை கண்டது.
இந்நிலையில், எஸ்.பி.ஐ., நடத்திய வங்கியியல் மற்றும் பொருளாதார கூட்டத்தில் கலந்து கொண்ட பல்வேறு பொருளாதார நிபுணர்கள், அடுத்த ஆண்டு, ரூபாய் அதிக அழுத்தத்தை சந்திக்க வேண்டியதிருக்கும் என்றும்; டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 82 - 85 ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், நடப்பு நிதியாண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 4 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

வாசகர் கருத்து (2)
ஏற்றுமதியை அதிகரித்து இறக்குமதியை குறைத்தால் இந்த ரூபாய் மதிப்பு சரிவால் இந்தியா மிகவும் லாபம் அடையும்....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ரொம்ப பெருமையா இருக்கு