இது குறித்து உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
நிதியமைச்சகம், நீண்ட கால மூலதன ஆதாய வரி சம்பந்தமான கட்டமைப்பில், மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறது. மிக எளிமையானதாக மாற்ற விரும்புகிறது.
கடன் பத்திரம்
ஒரே மாதிரியான சொத்து பிரிவுகளுக்கு இடையே, வரியில் சமமான நிலையை கொண்டு வர திட்டமிடுகிறது.
மேலும், 'இண்டக்சேஷன்' பலன்களை கணக்கிடுவதற்கான அடிப்படை ஆண்டை, மிகவும் பொருத்தமானதாக மாற்றவும் எண்ணியுள்ளது.
பங்குகள், கடன் பத்திரங்கள், மியூச்சுவல் பண்டுகள், வீடு என ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது பங்குகளை ஓராண்டுக்கு மேல் வைத்திருக்கும் பட்சத்தில், 10 சதவீத நீண்டகால ஆதாய வரி விதிக்கப்படுகிறது.
இதுவே, அசையா சொத்துக்களை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் அல்லது, நகைகளை மூன்று ஆண்டுகளுக்கு மேல் வைத்திருந்தால் 20 சதவீதம் நீண்ட கால மூலதன ஆதாய வரி விதிக்கப்படுகிறது.
பட்ஜெட் உரை
இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்க்கும் வகையில், ஒரே விதமான கால அளவு, ஒரே விதமான வரி விகிதம் ஆகியவற்றை கொண்டுவரும் முயற்சியை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்புகள், வரும் பட்ஜெட் உரையில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
மூலதன ஆதாய வரி கட்டமைப்பை எளிமையாகவும், வரி செலுத்துவோருக்கு இலகுவானதாகவும் மாற்ற அரசு விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!