ரூ.20 ஆயிரம் கோடி திரட்ட அதானிக்கு அனுமதி
புதுடில்லி:'அதானி' குழுமம், 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, புதிய பங்குகளை வெளியிடுவதன் வாயிலாக திரட்டுவதற்கு, அதன் நிர்வாக குழு ஒப்புதல் அளித்துள்ளது.
நேற்று நடைபெற்ற அதானி குழுமத்தின் நிர்வாக குழு கூட்டத்தில், 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனம், நிதி திரட்டிக் கொள்வதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் 72.63 சதவீத பங்குகள், அதன் புரோமோட்டர்கள் வசம் உள்ளன. 20 சதவீத பங்குகள் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், அன்னிய முதலீட்டாளர்கள் வசம் உள்ளன.
இந்நிலையில், பங்குதாரர் தளத்தை பன்முகப்படுத்தவும், முதலீட்டாளர்களிடையே நம்பகத்தன்மையை உருவாக்கவும், இந்த பங்கு வெளியீடு உதவும் என கருதப்படுகிறது.
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை, ஓராண்டில் இருமடங்கு அதிகரித்து, அதன் சந்தை மதிப்பு 4.46 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நிதி திரட்டுவதற்கு நிர்வாக குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அடுத்து, அதன் பங்குதாரர்களின் அனுமதியை, தபால் வாக்கு வாயிலாக பெற திட்டமிடப்பட்டு உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!