Load Image
Advertisement

மதுபான கொள்கை வழக்கு : சி.பி.ஐ., குற்றபத்திரிகை தாக்கல்

 மதுபான கொள்கை வழக்கு : சி.பி.ஐ., குற்றபத்திரிகை தாக்கல்
ADVERTISEMENT
புதுடில்லி : டில்லி முதல்வர் கெஜ்ரிவால் அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் இன்று சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சி நடக்கிறது. இதில் மதுபான கொள்முதல், விற்பனை, வரி விதிப்பு உள்ளிட்டவை தொடர்பான, புதிய கொள்கையில், மதுபான தொழிற்சாலைகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு, புதுடில்லி துணை நிலை கவர்னர் வி.கே. சக்சேனா உத்தரவிட்டார்.
Latest Tamil News
கலால் துறையை கவனிக்கும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உட்பட, 15 பேர் மீது கடந்த ஆகஸ்டில், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக மணீஷ் சிசோடியா சி.பி.ஐ. அலுவலகத்தில் ஆஜரானார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. இன்று ரோஸ் அவின்யூ நீதிமன்றத்தில் பல ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட துணை முதல்வர் மணீஷ் சிசோடியா பெயர் இடம் பெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement