ADVERTISEMENT
வாழப்பாடி:பெத்தநாயக்கன்பாளையம் அருகே பொதுமக்கள் திடீரென ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனை பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர், இன்று திடீரென முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள குறிப்பிட்ட சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் இரண்டு மாரியம்மன் கோவில் உள்ளது. அந்த மாரியம்மன் கோவில் பணத்தை குறிப்பிட்ட இரண்டு பேர் கையாடல் செய்து ஏமாற்றுவதாக புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை என போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நேற்று பொதுமக்கள் ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:
எங்கள் ஊரில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 1000கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறோம். எங்கள் சமூகத்திற்கு என்று தனிப்பட்ட முறையில் இரண்டு மாரியம்மன் கோயில்கள் உள்ளது. கோயில் நிர்வாகத்திற்கும், எங்கள் சமூக மக்களின் நலனை சார்ந்த பிரச்சனைகளை வழி நடத்துவதற்கும், எங்களுக்குள் மூப்பர், கரைக்காரர் என்று 8 பேர் கொண்ட குழுவை முன்னோர்கள் காலத்தில் இருந்து ஏற்படுத்தி மூன்று வருடத்திற்கு ஒருமுறை குழுவை மாற்றியமைத்து நிர்வாகம் செய்து வந்தோம்.
பத்து ஆண்டுக்கு முன் ஊர் மூப்பராக மற்றும் கரைகாரராக குறிப்பிட்ட இரண்டு பேர் இருந்து வந்தனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவர்கள் அப்பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு மற்ற இரண்டு பேர் பொது மக்களால் நியமிக்கப்பட்டனர். ஆனால் கடந்த 9 வருடத்தில், 14 லட்சம் கோவிலுக்கு சொந்தமான பணம் அந்த குறிப்பிட்ட இருவரிடம் உள்ளது.
தற்போது பணி காலம் முடிந்து ஊர் பொதுமக்கள் மற்றும் புதிய தர்மகர்த்தா ஒன்று கூடி பணத்தை கேட்ட போது, அடியாட்களை வைத்து ஊர் பொதுமக்களையும், நிர்வாகத்தினரையும் மிரட்டி வருகின்றனர்.
இது சம்பந்தமாக ஏற்கனவே வாழப்பாடி போலீஸ் ஸ்டேஷனிலும், ஏத்தாப்பூர் போலீஸ் ஸ்டேஷனிலும் கடந்த செப், 13ல் புகார் கொடுத்துள்ளோம். காவல்துறை விசாரணையில் அறிவுரை ஏற்கவில்லை. நேற்று முன்தினம் ஊர் பொதுமக்கள் ஒன்று கூடி மேற்கண்ட நபர்களிடம் கோயில் பணத்தை கேட்ட போது அடியாட்களை வைத்து மிரட்டினார்கள்.
ஊர் பொதுமக்கள் பயந்த நிலையில் உள்ளோம் எனவே மேற்கண்ட நபர்களை நேரில் விசாரித்து கோவில் பணம் கிடைக்க வழிவகை செய்யுமாறு தாழ்ந்த பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். என தெரிவித்துள்ளனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!