ADVERTISEMENT
புதுடில்லி: ஓர் பாலின திருமணங்களுக்கு சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சட்ட அங்கீகாரம் வழங்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தன் பாலின ஜோடியினர்உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது: ஓர் பாலின திருமணங்களுக்கு, சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, எல்.ஜி.பி.டி.க்யூ., சமூகத்தினர், தங்களுக்கு பிடித்த யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்வதற்கு சட்ட ரீதியான விதிமுறைகள் இல்லை.
இந்த குறையை போக்கி, சட்ட ரீதியான அங்கீகாரம் வழங்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டது. இந்த மனு, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கும், மத்திய அரசுக்கும் 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

வாசகர் கருத்து (10)
நீதிமன்ற வளாகத்திலேயே கலியாணம் செஞ்சு வெச்சு, பதிவு பண்ணி குடுத்திருங்க.
இந்த கலாச்சாரம் அங்கீகரிக்கப்பட்டால் உலகில் 'இந்தியா தனக்கென உரிய தனி கலாச்சாரம்' என்கிற பெருமையை இழக்கும்.
திரு ஆரூர் ராங் அவர்களே இரு ஆண்கள் திருமணம் செய்துகொண்டால் எப்படி குழந்தை பிறக்கும்
மேலும் இதன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டமும் கொண்டு வர வேண்டும்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஒரு பெண் தன்னைத் தானே திருமணம்செய்து கொண்டாரே...