Load Image
dinamalar telegram
Advertisement

கடந்த கால தவறுகளை இந்தியா சரி செய்கிறது: பிரதமர்

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: காலனித்துவ சகாப்தத்தில் சதியின் காரணமாக எழுதப்பட்ட வரலாற்றின் பக்கங்களில் தொலைந்து போன தனது பாரம்பரியத்தை கொண்டாடுவதன் மூலம் இந்தியா தனது கடந்த கால தவறுகளை சரி செய்து வருகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
Latest Tamil News
அசாமில் அஹோம் அரசாட்சி இருந்த 17 ம் நூற்றாண்டில் முகாலய மன்னர் அவுரங்கசீப்பின் படைகளை தோற்கடித்த தளபதி லச்சித் பாபுகானின் 400ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது இந்தியாவின் வரலாறு மட்டுமல்ல.

இந்தியாவின் வரலாறு என்பது அவர்களை எதிர்த்து போரிட்டதும், போர்களை முன்னின்று நிகழ்த்திய மாவீரர்கள் மற்றும் அவர்களின் தியாகங்களையும் சொல்வதே வரலாறு. அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வீரத்துடனும் துணிச்சலுடனும் நின்றது தான் இந்தியாவின் வரலாறு.
Latest Tamil News

ஆனால், துரதிர்ஷ்டவசமாக சுதந்திரத்திற்கு பிறகும் காலனித்துவ ஆட்சியில் பின்னப்பட்ட சதி காரணமாக எழுதப்பட்ட வரலாறு தான் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்கு பிறகு, நம்மை அடிமைகளாக்கிய வெளிநாட்டவர்களின் திட்டங்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால், அவை நடக்கவில்லை.
Latest Tamil News
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சர்வாதிகாரத்திற்கு எதிரான கதைகள் மறைக்கப்பட்டன. நீண்ட கால அடக்குமுறை ஆட்சியில், சர்வாதிகாரத்திற்கு எதிரான போரில் வெற்றி கிடைத்ததற்கான ஏராளமான வரலாறுகள் உள்ளன. அந்த வரலாறுகளை வெளிக்கொண்டு வராமல் விட்டதவறு தற்போது சரி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Latest Tamil News


வாசகர் கருத்து (15)

 • அப்புசாமி -

  2047 க்குள்ளாற டைம் மிசின் கண்டுபிடிச்சு, அதிலே கடந்த காலத்துக்குப் போய் தவறுகளை சரி செய்து விட்டு வந்துரலாம்

 • venugopal s -

  மத்திய பாஜக அரசு கடந்த எட்டு வருடங்களில் செய்த தவறுகளை திருத்தவே இன்னும் பத்து வருடங்களுக்கு மேல் தேவைப் படுமே

 • hari -

  will be from first fool..

 • g.s,rajan - chennai ,இந்தியா

  மோடிஜி கருப்புப்பணத்தைக் கைப்பற்றினால் நாட்டு மக்களின் வங்கிக்கணக்கில் தலா பதினைந்து லட்சம் போடுவதாக வாக்குறுதி அளித்தார் ,இதுவரை அதற்கான சுவடையே காணோம் ,கறுப்புப் பணம் மதிப்பிழப்பு படுதோல்வி .இந்தியா ரிசர்வ் வங்கியில் நமது நாட்டின் அவசரத் தேவைக்காக வைக்கப்பட்டு இருந்த இருந்த பல கோடி பணத்தை தனியார் கார்பொரேட் நிறுவனங்களுக்கு வராக்கடனுக்கு வரவு வைக்க அள்ளிக்கொடுத்தது தவறில்லையா ?? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் இதற்கு உடந்தைஎன்பதும் யாவரும் அறிந்த ஒன்று ,லாபத்தில் ஓடும் மத்திய நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்தது ,வங்கிகளை தேவை இல்லாமல் ஒருங்கிணைத்தது வேலைவாய்ப்பு தற்போது மேலும் குறைந்துள்ள நிலையில் துளி கூட அதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது தவறில்லையா???விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் எகிறி வரும் வேளையில் அதுபற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் உலகெங்கும் சுற்றி வருவது சரியா ???ஒருவேளைக்கு உண்ணுவதற்கு உணவு இல்லாமல் இந்தியாவில் கிட்டத்தட்ட என்பது கோடிப்பேர் பசியுடன் உறங்கச் செல்கின்றனர் என்பது போன்ற செய்திகள் ஒரு புறம் அதிர்ச்சியையும் மற்றொரு புறம் வேதனையையையும் அளித்து வருகிறது .நாளுக்கு நாள் ஏறிவரும் எரிபொருள் விலை உயர்வு சாதாரண மக்களிடம் பெரும் தாக்கத்தை, தாள முடியாத வெறுப்பை ஏற்படுத்திவருகிறது ,பெருகி வரும் வேலை இழப்புக்கள் இன்னும் பல் வேறு பொருளாதார சிக்கல்களை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்திவருவது உண்மையே.நிரந்தர வருமானம் இல்லாமல் பலர் இருப்பதால் பணப்புழக்கம் எங்கும் குறைந்து விட்டது ,பல வியாபாரங்கள் நொடித்து விட்டன ,இதை எல்லாம் எப்படி சரி செய்யப்போகிறார்கள் ???புரியவில்லை .

  • N SASIKUMAR YADHAV - ,

   இதற்கெல்லாம் புள்ளிவிவரத்தோடு ஒரு கட்டுரை எழுதுங்கள்

 • g.s,rajan - chennai ,இந்தியா

  இந்தக் காலத் தவறை இனிமேல் ஒருக்காலும் சரி செய்யவே முடியாது ,புரிந்தால் சரி .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement