Load Image
dinamalar telegram
Advertisement

புவனகிரி அஞ்சல் நிலையத்தில் மேற்கூரை பழுதால் பலரும் அச்சம்

புவனகிரி: புவனகிரி அஞ்சல் நிலையத்தில் மேற்கூரைகள் பழுதடைந்துள்ளதை சரி செய்து, அடிப்படை வசதிகளை விரிவு படுத்த வேண்டும். என ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோட்ட கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன் அனுப்பியுள்ள மனு:
கடலுார் மாவட்டம், புனகிரியில் இயங்கும் அஞ்சல் நிலையத்தில் சுற்றுபகுதியைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள்,சிறுசேமிப்பு, செல்வமகள் சேமிப்பு, நிரந்தர வைப்புத்தொகை உள்ளிட்ட பல்வேறு கணக்கு வைத்துள்ளனர். மேலும், தினசரி பல்வேறு தேவைகளுக்கு அஞ்சல் பயன்பாட்டினை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இந்த அலுவலகத்தில் மேற்கூரைகள் ஆங்காங்கே பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பணியாற்றும் ஊழியர்கள் அச்சத்தில் வந்து செல்லும் அவலம் நீடிக்கிறது. இவற்றை சரிசெய்வதுடன், அலுவலகத்தின் வெளியில் நிரந்தர தபால் பெட்டி வைப்பதுடன், பழுதடைந்துள்ள ஜெனரேட்டரை சரி செய்து மின் நிறுத்த காலத்தில் பயன்பாட்டிற்கும், வாடிக்கையாளர்களுக்கு இருக்கையுடன், தேவையான மின் விசிரி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரிவு படுத்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement