Load Image
dinamalar telegram
Advertisement

புவனகிரி, சிதம்பரம் தாலுகாவில் முத்திரைத்தாள் தட்டுப்பாடு


புவனகிரி: புவனகிரி, சிதம்பரம் தாலுகாவில் முத்திரைத்தாள்(பத்திரம்) தட்டுப்பட்டால் பல்வேறு தேவைகளுக்கு அப்பகுதியினர் அவதி அடைந்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் கருவூலத்தின் மூலம், அங்கிகரிக்கப்பட்ட முகவர்களால், தமிழக அரசின் முத்திரைத்தாள் (பத்திரம்) விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் தங்களின் பல்வேறு தேவைகளுக்கு முத்திரைத்தாளை வாங்கி பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் சிதம்பரம் கருவூலத்தில் இந்த பிரிவில் பணியாற்றிய ஊழியர் பணியிடம் நிரப்பாமல் காலியாக உள்ளது.

இதனால் முத்திரைத்தாள் வினியோகம் குறைத்துள்ளதால்,தற்போது இரு தாலுகா பகுதியில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் இங்கு கூடுதல் பொறுப்பில் பணியாற்றிவர் போட்டித் (அரசு) தேர்வுகள் குறித்த வினாத்தாள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு சென்றதால் கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தற்போது முத்திரைத்தாள் தேவைக்கு முகவர்கள் முதல் நாளே அதற்காண கட்டணத்தை அலுவலகத்தில் செலுத்தி ரசீதை உரியவரிடம் கொடுத்தால் மறு நாள் வழங்குகின்றனர். இதனால் அனைவருக்கும் மிகுந்த மன உளச்சல் ஏற்பட்டுள்ளது. ரூ.10 முதல் ரூ.100 வரை தினசரி 2 ஆயிரம் முத்திரைத்தாள் விற்பனை செய்த முகவர்களுக்கு தற்போது 25 முத்திரைத்தாள் மட்டும் வழங்கப்படுகிறது.

இதனால் பல்வேறு தேவைகளுக்கு பொதுமக்கள் கடும் அவதியடைகின்றனர். கடலுார் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தட்டுப்பாடு இல்லாமல் வழங்குவதை போல் சிதம்பரம், புவனகிரி தாலுகாவிலும் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முகவர்கள், பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைத்துள்ளனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement