Load Image
Advertisement

மத்திய பட்ஜெட்: மாநில அரசுகளின் கருத்துகளை கேட்ட மத்திய நிதியமைச்சர்

 மத்திய பட்ஜெட்: மாநில அரசுகளின் கருத்துகளை கேட்ட மத்திய நிதியமைச்சர்
ADVERTISEMENT


புதுடில்லி: மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், மாநில அரசுகளின் கருத்துகளை நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.

2023-24ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் பிப்.,1 அன்று தாக்கல் செய்யப்படக்கூடும். இதற்கான பணிகள் கடந்த அக்.,10 ம் தேதி துவங்கிவிட்டது. பொருளாதார நிபுணர்கள், தொழில்துறையினர், விவசாயத்துறையினர், உணவுபதப்படுத்தும் தொழில் துறை என பல்வேறு அமைப்பினருடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கான முதல் கூட்டம் கடந்த திங்கட்கிழமை அன்று துவங்கியது.
Latest Tamil News

இந்நிலையில், இந்த பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டம் டில்லியில் நடந்தது. நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணையமைச்சர்கள் பங்கஜ் சவுத்ரி, பக்வத் காரத், நிதித்துறை செயலாளர், தலைமை பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் உள்ளிட்டோரும் பங்கேற்ற இந்த கூட்டத்தில், தமிழக நிதியமைச்சர் தியாகராஜன் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தின் போது, பட்ஜெட் குறித்து மாநில அரசுகளின் கருத்துகளை நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார்.


வாசகர் கருத்து (10)

 • Mohan - Thanjavur ,இந்தியா

  இவிங்க அங்க போனாலும்தான் ஒன்பது ஓட்டையையும் ஒன்பது விரலை வச்சு அடைச்சுக்கிராங்களே.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  சுண்டைக்காய் விலை குறையுமா ???

 • M Ramachandran - Chennai,இந்தியா

  மாநில அரசை கேட்பது இருக்கட்டும் போது மக்களிடமிருந்தும் அவர்கள் கருத்து கேட்பது உசிதமானது. விளம்பர காசுக்காக சொறி டி வி போன்ர சேனல்கள் வந்ததிலிருந்து பெண்கள் வில்லிகளாக்கி அவர்கள் மனம் கேடாக ஏதுவாகி விட்டது. முன்பு ஆரம்பகாலத்தில் அதற்க்கு சென்சார் கமிட்டி இருந்தது. இந்த திருட்டு கும்பல் மத்தியில் அரசை மிரட்டி வாங்கிய செய்தி ஒளிபரப்பு தயான் வசமாக்கிக்கொண்டு தங்கள் சொந்த சானலுக்கு வேண்டிய வசதிகள் செய்து கொண்டது மில்லாமல் சென்சார் போருடைஏ குப்பை ஆக்கி விட்டது . அது மாட்டு மல்லாமல் அரசுக்கு வரவேண்டியா வருமானத்தையும் கெடுத்து விட்டது . சினிமாவில் தியேட்டர்களில் காண்பிக்கும் விளமபரத்திற்கு மத்திய அரசு வரி உண்டு . இவங்கள் நடத்தும் வரி ஏய்ப்பு செய்து குடும்ப கும்பல் ஆதிக்கதை பெருக்கி கொள்வது. இந்த விஷயம் ப சி பயனான்ஸ் மந்திரியாக இருந்த போது வரி விதிக்க வெண்டியிருக்கிறது என்று பட்ஜெட் முந்தைய கூட்டத்தில் தெரிவித்து படஜெட் போடும்போது மிரட்ட பட்டோ அல்லது கவனிப்பாலோ அது வரவில்லை இப்போ உள்ள அரசாவது கவனத்தி கொள்ள வேண்டும் ..

 • அப்புசாமி -

  இவிங்க கருத்து கேட்பூலக ஃபேமஸ் ஆச்சே..மாநிலங்களுக்கு என்ன வேணும்னு இவுரு கேப்பாங்க. மாநிலங்கள் நிதி பத்தலேன்னு சொல்லுவாங்க.இவிங்க உடனே எல்லா வரிகளையும் ஏத்தி மக்களிடமிருந்து உருவி சமஸ்கிருதம், இந்தி, உ.பி, குஜராத் க்கு நிதி ஒதுக்கிட்டு பாக்கி இருந்தா நமக்கு குடுப்பாங்க. ஏம்மா இப்பிடி செய்றீங்கன்னு கேட்டா மாநிலங்களின் ஒத்துழைப்போடதான் உருவுனோம்பாங்க. நூறாண்டு பட்ஜெட் இப்பிடித்தான் போடணும்

 • venugopal s -

  கருத்து கேட்பது எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறது, ஆனால் கடைசியில் நீங்கள் இஷ்டத்துக்கு ஏதாவது செய்கிறீர்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement