Load Image
dinamalar telegram
Advertisement

"நான் அவள் இல்லை" - கோர்ட்டில் கதறிய சுவாதி

Tamil News
ADVERTISEMENT

மதுரை: கடந்த 2015 ல் சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல் ராஜ் என்பவர் ரயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். இது குறித்த விசாரணையில் ஆணவக்கொலை என தெரிய வந்தது. இதனையடுத்து 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சுவாதி என்பவர் முக்கிய சாட்சியாவார்.

ஒரு வீடியோவில் கோகுல்ராஜூவுடன் இருப்பது குறித்து திரையிட்டு சுவாதியிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். ஆனால் சுவாதி " இது நான் அல்ல " - என பதில் அளித்தார். " உங்களை யே உங்களுக்கு தெரியவில்லையா நீதிமன்றத்தில் விளையாட வேண்டாம்" என எச்சரித்தனர்.

இதனையடுத்து சுவாதி கண்ணீர் விட்டு கதறி அழுதார் . தொடர்ந்து அவர் மயங்கிய நிலைக்கு சென்றதால் மருத்துவமனையில் அனுமதிக்க உத்தரவிட்டு வரும் 30ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தனர். பிறழ்சாட்சியாக மாறி உண்மையை மறைப்பது கோர்ட் அவமதிப்பாகும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து (4)

  • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

    உண்மையை சொல்ல மறுக்கும் சுவாதிக்கு உண்மையை கண்டறியும் சோதனை மேற்கொண்டால் என்ன??

  • தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா

    இந்த சாட்சி பெண்தான் முதலில் போலீசில்புகார் கொடுத்தது ....தற்போது ஜாதி சங்கங்கள் , ஜாதி தலைவர்கள் / குண்டர்கள் மிரட்டலால் , இப்படி பிறழ் சாட்சியாகி கதறுகிறது .....ஜாதி தலைவர்கள் ,ஜாதி நாட்டாண்மைகளை கழுத்துக்கீழ் எந்த உறுப்பும் செயல்படாதவாறு செய்துவிட்டால் , பாதி பிரச்சினை முடிந்துவிடும் .... இந்த பிறழ் சாட்சி ஸ்வாதியின் வீட்டு பெண்கள் பெற்றோர்களை பிளாக் மெயில் செய்வதன் மூலம் , சாட்சி மிரட்டப்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் ...தனியரசு கும்பலை சேர்ந்தவர்களை , தமிழகத்துக்கு வெளியே வெறும் எங்காவது வட மாநில சிறைகளில் வைத்து நொங்கு எடுத்தால் , அனைத்து உண்மைகளும் வெளிவர வாய்ப்பு இருக்கும் ....

  • duruvasar - indraprastham,இந்தியா

    ட்ராவிடியன் ஸ்டாக்கோ ?

  • Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

    அயோக்கிய அரசியல்வாதிகளை இதே போல கேள்விகேட்க இயலாத நீதிபதிகளே !

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்