Load Image
dinamalar telegram
Advertisement

பெட்ரோல், டீசல் வாங்க டாலருக்கு பதில் தங்கம் : கானா அரசு திட்டம்

Tamil News
ADVERTISEMENT


எண்ணெய் பொருட்கள் இறக்குமதிக்கு, அமெரிக்க டாலருக்கு பதிலாக தங்கத்தை அளித்து வாங்கும் வகையில், புதிய கொள்கையை அமலுக்கு கொண்டு வர இருப்பதாக கானா நாட்டின் துணை ஜனாதிபதி மகாமுது பவுமியா அறிவித்துள்ளார்.



மேற்கு ஆப்ரிக்க நாடான கானா கச்சா எண்ணெயை உற்பத்தி செய்கிறது. ஆனால் 2017ல் ஏற்பட்ட விபத்து காரணமாக அதன் ஒரே சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டதிலிருந்து, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் தயாரிப்புகளுக்கான இறக்குமதியை நம்பியுள்ளது. தற்போது எண்ணெய் பொருட்கள் இறக்குமதி காரணமாக, குறைந்து வரும் அன்னிய செலாவணி கையிருப்பை சமாளிக்கும் வகையில் புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது.


சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பால், உள்ளூர் பணமதிப்பு பலவீனமாகிறது. மேலும் விலைவாசி உயர்வால், அன்றாட வாழ்க்கை செலவுகளும் அதிகரிக்கிறது.கானாவின் மொத்த அன்னிய செலாவணி கையிருப்பு, செப்டம்பர் இறுதியில் 6.6 பில்லியன் டாலராக இருந்தது. இது 3 மாதங்களுக்கும் குறைவான இறக்குமதிக்கு சமம். கடந்தாண்டு இறுதியில் 9.7 பில்லியன் டாலரில் இருந்து இந்தளவு குறைந்துள்ளது என்று கானா அரசு தெரிவித்துள்ளது.
Latest Tamil News இது குறித்து கானா நாட்டின் துணை ஜனாதிபதி மகாமுது பவுமியா கூறுகையில்,

புதிய கொள்கை, அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டில் அமலுக்கு வரும்பட்சத்தில், அடிப்படையில் செலுத்த வேண்டிய பணத்தின் அடிப்படை மாறுவதால், உள்நாட்டு கரன்சியின் மதிப்பு சரிவதை கணிசமாக குறைக்கும். தங்கத்தைப் பயன்படுத்துவதால், உள்நாட்டு விற்பனையாளர்களுக்கு எண்ணெய் பொருட்களை இறக்குமதி செய்ய அன்னிய செலாவணி தேவைப்படாது. இதனால் எண்ணெய் பொருட்கள் விலையால் நேரடியாக பாதிப்பதில் இருந்து தடுக்க இயலும். எண்ணெய் பொருட்களுக்கான தங்கப் பண்டமாற்று ஒரு பெரிய கட்டமைப்பு மாற்றத்தைக் குறிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கானா அரசின் புதிய கொள்கை, வழக்கத்துக்கு மாறான ஒன்று. ஏனெனில், பொதுவாக சில நாடுகள், மற்ற பொருட்கள் அல்லது பொருட்களுக்கு மாற்றாக வைத்து எண்ணெய் வர்த்தகம் செய்யும். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடு, மற்றொரு நாட்டிடம் எண்ணெய் அல்லாத பொருட்களைப் பெறுவது என்பது வழக்கமாக நடைமுறையில் உள்ள ஒன்றாகும். மேலும், கானா அரசு, தற்போதைய கடன் நெருக்கடியை சமாளிக்க, செலவுகளை குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும் பல்வேறு முயற்சிகளில் இறங்கியுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement