Load Image
dinamalar telegram
Advertisement

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மானாவாரி நிலத்தில் மரப்பயிர் சாகுபடி

Tamil News
ADVERTISEMENT
மதுரை: விருதுநகரில் நவ.,27ல் நடக்கவுள்ள, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பாக மானாவாரி நிலங்களில் மரப்பயிர் சாகுபடி செய்து லாபம் அடைவது குறித்த கருத்தரங்கில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொள்கின்றனர்.

மதுரையில் காவிரி கூக்குரல் இயக்க மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன், சிவகங்கை மாவட்ட விவசாயி சம்பத், பேரையூர் விவசாயி வாசி மலை கூறியதாவது:

சாத்தூர் ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் நவ.,27 ல் நடக்கும் கருத்தங்கில் வேப்ப மரத்தில் இருந்து லாபம் எடுப்பது குறித்து பேசப்பட உள்ளது. கொடுக்காப்புளி, சந்தனம், இலுப்பை மர வளர்ப்பு குறித்து நிபுணர்கள் பேச உள்ளனர்.

தவிர நாவல், செம்மரம், நாட்டு வாகை, பலா மர வளர்ப்பு குறித்தும் பேச உள்ளனர். பங்கேற்க விரும்பும் விவசாயிகள் 90025 90079 ல் முன்பதிவு செய்ய வேண்டும்.

இயக்கம் சார்பில் தென் மாவட்டங்களில் 24 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளோம். ஈஷா நாற்றுப் பண்ணைகளில் அனைத்து வகையான டிம்பர் மரக் கன்றுகளும் ரூ.3க்கு விநியோகம் செய்யப்படுகிறது. இவ்வாறு கூறினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement