Load Image
dinamalar telegram
Advertisement

அமராவதி அணை உபரிநீர் உப்பாறு அணையை எட்டுமா?

திருப்பூர்: அமராவதி அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை, வறட்சி நிலையில் உள்ள உப்பாறு அணைக்கு திருப்பும் புதிய திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுப்பது அவசியம் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறியதாவது:

உப்பாறு பாசனத்தை சார்ந்து, 6,100 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்தாண்டு பி.ஏ.பி., பாசன நிலங்களில் தண்ணீர் தேவையை, வடகிழக்கு பருவ மழையே பூர்த்தி செய்துவிட்டது. அதனால், பி.ஏ.பி., நான்காம் மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கும்முன், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும்.

நாட்டுக்கல் பாளையத்தில், அமராவதியின் பிரதான வாய்க்காலிலிருந்து, 8 கி.மீ.,க்கு புதிய வாய்க்கால் வெட்டவேண்டும். இதனால், அமராவதியில் வெளியேறும் உபரி நீரை, நேரடியாக கொண்டு வந்து, உப்பாறு அணையை நிரப்பமுடியும். கடந்த 2009ல், அமராவதி நீரை உப்பாறு அணைக்கு தண்ணீர் கொண்டுவதற்கான திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், நிறைவேறவில்லை. எனவே, அந்த திட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் கூறினார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement