Load Image
dinamalar telegram
Advertisement

வடகிழக்கு பருவ மழை குறையும்: வானிலை மையம் கணிப்பு

Tamil News
ADVERTISEMENT

சென்னை: நவ., 25 முதல் டிச., 8 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.


வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறியதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கடந்த நவ., 17 முதல் 23 வரை காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது.

இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 34 மி.மீ.,
பதிவான அளவு 3 மி.மீ.,
இது இயல்பை விட 91 சதவீதம் குறைவு.

16 மாவட்டங்களில் மழை பதிவாகவில்லை. 22 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாக பதிவாகி உள்ளது.

அக்.,1 முதல் நவ.,23 வரை காலகட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பகுதிகளில் பதிவான வடகிழக்கு பருவமழையின் அளவு 330 மி.மீ.,
இயல்பான அளவு 317 மி.மீ., இது இயல்பை விட 4 சதவீதம் அதிகம்
Latest Tamil News
கடந்த வாரத்திற்கு முந்தைய வாரம் இயல்பை விட 17 சதவீதமாக இருந்த பருவமழையின் அளவு, தற்போது 4 சதவீதமாக குறைந்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி அமைந்துள்ளது.

நவ., 25 முதல் டிச., 8 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், வடகிழக்கு பருவமழை இயல்பை விட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (11)

  • qwqewq - Chennai,இந்தியா

    விஞ்சானிகளை நம்பி வந்ததண்ணீரையும் வீணாக கடலில் விட்டுவிட்டு இப்போது வானம் பார்த்த பூமியாக இருக்கவேண்டியுள்ளது . மோடி அரசு வாநிலை மையங்களை புனரமைக்கவேண்டும் இஸ்ரோவை சீரமைக்கவேண்டும் தினந்தோறும் ஒரு செயற்கைகோள், உலகிலிலேயே தோளினிடத்தும் வாய்ந்த செயற்கைக்கோளை விடவேண்டும் .

  • sridhar - Chennai,இந்தியா

    ஒரு இடத்தில பெய்து கெடுத்தது , ஒரு இடத்தில பெய்யாம கெடுத்தது .

  • ramesh - chennai,இந்தியா

    தென் மாவட்டங்களாகிய திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் ஒரு நாள் கூட கால மழை பெய்யவில்லை .இந்த வருடம் நிலத்தடிநீர் அவளவுதான் போல் தெரிகிறது

  • chinnamanibalan - Thoothukudi,இந்தியா

    இந்த ஆண்டில் வடகிழக்கு பருவமழை வழக்கமான அளவில் இருக்கும் என வானிலை அறிவிப்பில் கூறப்பட்டது. ஆனால் சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் இதுவரை போதுமான மழை இல்லாததால் வறட்சிக்கு உள்ளாகும் சூழ்நிலைதான் உள்ளது.

  • Sureshkumar - Coimbatore,இந்தியா

    இயற்கையை குடுக்கிற மழைக்கு விடியல் ராசி தான் காரணம்னு பீத்திக்கிற உ.பி க்கள் கவனிக்கவும் .

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்