Load Image
dinamalar telegram
Advertisement

செங்கோட்டை வழியாக தாம்பரம் -- எர்ணாகுளம் சிறப்பு ரயில்

மதுரை: செங்கோட்டை வழியாக தாம்பரம் - எர்ணாகுளம் இடையே வாராந்திர சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே இயக்குகிறது.

இதன்படி எர்ணாகுளம் --- தாம்பரம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06068) எர்ணாகுளத்தில் இருந்து நவ., 28 முதல் ஜன., 2 வரை திங்கட்கிழமைகளில் மதியம் 1:10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12:00 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் -- எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06067) தாம்பரத்தில் இருந்து

நவ., 29 முதல் ஜன., 3 வரை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 3:40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12: 00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும். இந்த ரயில்கள் கோட்டயம், செங்கனாச்சேரி, திருவல்லா, செங்கனுார், மாவேலிக்கரா, காயன்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவணேஸ்வரம், புனலுார், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (நவ., 25) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement