Load Image
dinamalar telegram
Advertisement

பிரஷ் முதல் பக்க பேனர் செய்தி

நம் அண்டை நாடான இலங்கை போதைப் பொருள் கடத்தலின் மையமாக உள்ளது; போதைப் பொருள் பயன்பாடும் அங்கு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து 'ஐஸ்' என்றழைக்கப்படும் 'கிரிஸ்டன் மெதாம்படெமின்' என்ற ஆபத்தான போதைப் பொருள் ௫ கிராம் அளவுக்கு வைத்திருந்தாலே மரண தண்டனை விதிக்கும் வகையில் நச்சுப் பொருள் அபின் அபாயகர மசோதா திருத்தச் சட்டம் கடந்த அக். ௧௯ம் தேதி அந்நாட்டின் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கான மசோதாவில் கையொப்பமிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிமுகப்படுத்தினார்.

இந்த சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதை அடுத்து மரண தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின்படி ௫ கிராம் ஐஸ் ரக போதைப் பொருள் வைத்திருந்தால் விற்பனை செய்தால் மரண தண்டனை விதிக்க முடியும்.

இது குறித்து இலங்கையின் நீதி சிறை நிர்வாகம் அரசியல் சாசன சீர்திருத்தத் துறைகளின் அமைச்சர் டாக்டர் விஜயதாசா ராஜபக்சே நேற்று கூறியதாவது: மிகவும் ஆபத்தான போதைப் பொருள் மற்றும் நச்சுப் பொருள்கள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி வருகிறது.
இது கடந்த சில மாதங்களில் நம் கடற்படை அதிகளவில் பறிமுதல் செய்துள்ளதில் இருந்து உறுதியாகிறது.

போதைப் பொருள் கடத்தலை தடுக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக அதிபர் அதிரடி பணிக்குழுவை உருவாக்க சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர ஒன்பது மாகாணத்தில் போதைப் பொருள் தடுப்பு அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இந்த அமைப்புகளுடன் அதிபர் அதிரடி பணிக்குழு இணைந்து செயல்படும். இலங்கை வழியாக போதைப் பொருள் கடத்தப்படுவது தடுக்கப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கும்படி உச்ச நீதிமன்ற தலைமை ↔தொடர்ச்சி கடைசி பக்கம்நீதிபதியிடம் கோரியுள்ளோம். வரும் ஜனவரியில் இந்த நீதிமன்றம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போதைப் பொருள் கடத்தல் பயன்பாடு நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர தனிமனித உடல்நல பாதிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தற்போதுள்ள புள்ளி விபரங்கள் முறையாக தொகுக்கப்படாதவை. இதன்படி நாட்டில் ஐந்து லட்சம் இளைஞர்கள் போதைப் பொருள் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். பள்ளி கல்லூரி மாணவர்களும் இதில் அடங்குவர். இது மிகவும் தீவிரமான பிரச்னை.

சில அரசு அதிகாரிகள் ஊழல்வாதிகளாக உள்ளனர். இதனால் இனி பிடிபடும் கடத்தல் போதைப் பொருள்களில் 'சாம்பிள்' எனப்படும் மாதிரிகள் மட்டுமே எடுத்து வைக்கப்படும்; மீதமுள்ளவை உடனடியாக அழிக்கப்படும்.

போதைப் பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்தவும் விற்பனையை தடுக்கவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக ௫ கிராம் அளவுக்கு ஐஸ் ரக போதைப் பொருள் வைத்திருப்போருக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தை மிகத் தீவிரமாக செயல்படுத்தும்படி போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கொழும்பு, நவ. ௨௫-

போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் ௫ கிராம் அளவுக்கு போதைப் பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement