Load Image
dinamalar telegram
Advertisement

அரசு மருத்துவமனைகளில் இருதய பரிசோதனை கருவி நிறுவ கோரிய வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மதுரை: மதுரை உட்பட தென் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் இருதய பாதிப்பை துல்லியமாக அறியும் '4 டி எக்கோ கார்டியோகிராபி' இயந்திரம் நிறுவ தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை கே.கே.நகரை சேர்ந்த வெரோனிக்கா மேரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது: இருதய பாதிப்பை துல்லியமாக கண்டறியும் '4 டி' எக்கோ கார்டியோகிராபி இயந்திரம் சென்னை அரசு மருத்துவமனைகளில் உள்ளது. மதுரை அரசு மருத்துவமனை உட்பட தென் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் அந்த இயந்திரம் இல்லை. தற்போது இருதய பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மதுரை, தேனி, ராமநாதபுரம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி அரசு தலைமை மருத்துவமனைகளில் '4 டி' எக்கோ கார்டியோகிராபி இயந்திரம் நிறுவவேண்டும். இருதய சிகிச்சை பிரிவை மேம்படுத்தி, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும். 24 மணி நேரமும் செயல்பட வலியுறுத்தி தமிழக அரசுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்திய நாராயண பிரசாத் அமர்வு அந்த மனுவை விசாரித்தது.

தமிழக சுகாதாரத்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர், மதுரை அரசு மருத்துவமனை டீனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை மூன்று வாரங்கள் ஒத்திவைத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement