ADVERTISEMENT
சென்னை: சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே, த.மா.கா., சார்பில், பால் விலை உயர்வை கண்டித்து, நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
வாசன் உள்ளிட்டோர் பங்கேற்று, விலை உயர்விற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின், வாசன் அளித்த பேட்டி:
பால் விலை, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்வு என, மக்கள் மீது இந்த அரசு மும்முனை தாக்குதல் நடத்தியுள்ளது. மக்கள் நலன் கருதி, விலை உயர்வை குறைக்க வேண்டும். முன்னாள் முதல்வர் பழனிசாமி, கவர்னரை சந்தித்து, தமிழகத்தின் உண்மை நிலையை எடுத்துரைத்துள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை, சீர்காழியைச் சேர்ந்த மக்களுக்கு, தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. பாதிப்பின் தன்மைக்கு ஏற்றவாறு, 3,000 முதல் 5,000 ரூபாயாக வழங்க வேண்டும்.
கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்றாத தி.மு.க., அரசு, மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. தி.மு.க.,வுக்கு எதிர்மறை ஓட்டுகள் அதிகரித்து வருகின்றன. அது, எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக மாறும். தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். லோக்சபா தேர்தலில், பா.ஜ., வென்று, மீண் டும் ஆட்சியை பிடிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

அப்போ நீங்க ?