ADVERTISEMENT
புதுடில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவாலை கொலை செய்ய பா.ஜ., சதி செய்வதாக துணை முதல்வர் மணிஷ் சோடியா குற்றம்சாட்டி உள்ளார். ஆண்டுகள் மாறினாலும் குற்றச்சாட்டு மட்டும் மாறவில்லை என பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.
குஜராத் சட்டசபை மற்றும் டில்லி மாநகராட்சிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அந்த இரண்டு இடங்களிலும் பா.ஜ., மற்றும் ஆம் ஆத்மி கட்சி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில், மணிஷ் சிசோடியா நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் கெஜ்ரிவாலுக்கு பா.ஜ., எம்.பி., மனோஜ் திவாரி மிரட்டல் விடுத்துள்ளார். இதன் மூலம் கெஜ்ரிவாலை கொல்ல பா.ஜ., சதி செய்வது தெளிவாகி உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்போம். வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள மனோஜ் திவாரி கூறுகையில், கெஜ்ரிவாலின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்தே கருத்து தெரிவித்தேன். அவரது கட்சி எம்.எல்.ஏ.,க்களை அவர்களே தாக்குகின்றனர். தொண்டர் கொலை செய்யப்பட்டார்.
இது போன்ற சூழ்நிலைகள் கவலையை தருகிறது. கொலை மற்றும் மிரட்டல் என்ற ஆம் ஆத்மியின் கதை மிகவும் பழையது. ஆண்டுகள் மாறினாலும் அவர்கள் ஒரே குற்றச்சாட்டை கூறுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (30)
இவன் தன குரூ அண்ணா அசாரேயையெ யேமற்றி புளுகி மக்களையும் ஏமற்றி பதவியாய் பிடித்தவன் . அரசு நடத்த சரியான திட்டமிடல் இல்லை. புளுகு ஒன்றெ அவன் மூலதனம் . புளுகு புளுகிஎ காலம் தள்பவன் . அரசு நடத்தும் திறமை ஸிரோ .நாட்டின் எதிரிகளானது கைகோர்ப்பவன் .
அவன் மூஞ்சியய் பார்த்தல் ரா திருடன் போல் இருக்கு .
ஐயோ அப்படியா கொலை செய்தவனுடன் சொல்லுங்கள் பாராட்டு தெரிவிக்க வேண்டும்
திமுக விடம் அரசியல் பாடம் கற்று இன்று அவர்களையே மிஞ்சி விட்டார்கள். ஊழலிலும் கூட.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஊழல் மூலம் கெஜ்ரியும் பலனடைந்திருப்பார் ..... சிசோடியாவை மட்டும் கெஜ்ரி காட்டிக்கொடுத்து தப்பிவிடக் கூடாது என்கிற பயத்தால் சிசோடியா உளறத் தொடங்கிவிட்டதையே இது காட்டுகிறது ......