Load Image
dinamalar telegram
Advertisement

‛‛விடாது கருப்பு: சீனாவை துரத்தி துரத்தி துவம்சம் செய்யும் கொரோனா: ஒரே நாளில் 32,943 பேர் பாதிப்பு

Tamil News
ADVERTISEMENT

வூஹான்: சீனாவில் கடந்த சில நாட்களாக கோவிட் தொற்று அதிகளவு பரவி வரும் நிலையில், நேற்று (நவ.,24) ஒரேநாளில் 32,943 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. அதன்பிறகு உலகம் முழுவதும் பரவிய தொற்றுக்கு லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல நாடுகளில் கோவிட் 3 அலைகளுக்கு மேல் ஏற்பட்டு, பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட போதிலும், சீனா தொற்று பாதிப்பில் இருந்து விரைவாக மீண்டது.

தற்போது படிப்படியாக சில நாடுகளில் கோவிட் தொற்று குறைந்து மீண்டு வருகின்றன. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க துவங்கியுள்ளது.

Latest Tamil News
கடந்த மூன்று வாரங்களில் மட்டும், கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் கோவிட் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாகவும், தின சராசரி தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், சீன அரசு தெரிவித்தது. நேற்று முன்தினம் (நவ.,23) ஒரே நாளில் 31,656 பேருக்கு கோவிட் தொற்று உறுதியான நிலையில், நேற்று மட்டும் 32,943 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் கோவிட் தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து இதுவே ஒருநாள் அதிக பாதிப்பாகும்.


வாசகர் கருத்து (20)

  • மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து

    சீனாவில் கொரோனா சாஸ்தி'யாவுது.. அதனால்தான் கூவுகிறோம்... பிஜேபியை தமிழ்நாட்டில் வர விடக்கூடாது..

  • qwqewq - Chennai,இந்தியா

    இந்தியாவை விட இனியும் குறைவுதான். தினமும் லச்சம்பெருக்கு மேல் என்ன ஆயிற்று , மோடி அரசு அனைத்திலும் தோல்வியுற்றற்று இப்போது அந்நியர்களின் காலடியில் தவமிருக்கிறது . ஏதாவது ஆசி அருள் கிடைக்காதா என்று

    • Kumar - California,யூ.எஸ்.ஏ

      இப்படி இந்திய நாட்டை தரக்குறைவாக நினைக்கவேண்டாம்.....

  • sri hari -

    தன் வினை தன்னை சுடும்

  • Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

    மறுபடியும் மொதல்ல இருந்தாஆஆஆஆ.... ஷ்ஷப்பா இப்பவே கண்ண கட்டுதே

  • Ramakrishnan R - Johilpatti,இந்தியா

    சீனாவிலிருந்து மீண்டும் மற்ற நாடுகளுக்கு கொரோனா பரவாமல் தடுக்க வேண்டுமானால், சீன பொருட்களையும் சீனர்களையும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் அவற்றால் மட்டுமே நோய் பரவும். வினை விதைத்தவர்கள், வினை அறுக்கட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement