Load Image
dinamalar telegram
Advertisement

டில்லி மாநகராட்சி தேர்தல்: ‛சீட் கிடைக்காத விரக்தியில் ஆம்ஆத்மி நிர்வாகி தற்கொலை

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: டில்லி மாநகராட்சி தேர்தலில் கட்சி தரப்பில் இருந்து தனக்கு ‛சீட்' கொடுக்கவில்லை என்ற விரக்தியில் ஆம்ஆத்மி வர்த்தக பிரிவு செயலாளர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


டில்லியில் மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மாநகராட்சிகள் அனைத்தையும் கைப்பற்ற அந்த கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதேநேரத்தில் யாருக்கு சீட் வழங்கலாம் என்பதை பணத்தின் அடிப்படையில் ஆம் ஆத்மி நிர்ணயம் செய்வதாக பா.ஜ., நீண்ட காலமாக குற்றஞ்சாட்டி வருகிறது. இது ஒருபுறம் இருக்க மாநகராட்சி தேர்தலில் சீட் கொடுக்காத விரக்தியில் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி சந்தீப் பரத்வாஜ் தற்கொலை செய்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest Tamil News
மேற்கு டில்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் வசிக்கும் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி சந்தீப் பரத்வாஜ்,55, டில்லி மாநகராட்சி தேர்தலில் தனக்கு ‛சீட்' கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால், கட்சி தலைமை அவருக்கு ‛சீட்' கொடுக்காமல் வேறொருவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. இதனால் விரக்தி அடைந்த அவர் நேற்று (நவ.,24) மாலை 4:40 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு குஜ்ரேஜா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை செய்துக்கொண்ட சந்தீப் பரத்வாஜ், ஆம்ஆத்மி கட்சியின் வர்த்தக பிரிவின் செயலாளராக இருந்து வந்தார். அவருக்கு திருமணமாகாத இரு சகோதரிகள் மற்றும் 20 வயதில் ஒரு மகன் உள்ளனர்.


வாசகர் கருத்து (8)

  • Raj - Chennai,இந்தியா

    நன்றாக விசாரியுங்கள், நிறைய கடன் வாங்கியிருப்பான்..

  • duruvasar - indraprastham,இந்தியா

    மதுபான ஒதுக்கீடு விஷயதில் வந்திருக்கும் அமௌண்ட்டு அளவு பற்றி வெளியில் வந்த பிறகு எல்லோருக்குமே இந்த கட்சியில் ஒரு சீட் வாங்கி ஆட்சியாளராக மாறவேண்டும் என்ற ஆர்வம் இருக்கதான் செய்யும் .

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    இதற்க்கே இப்படி இருந்திருக்கிறார் எங்கள் முடியாட்சில் பரம்பரையாக எந்த ஒரு கேள்வியையும் கேட்காமல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் கடமையை செய்துகொண்டு இருக்கும் தூயவர்களிடம் பாடம் பயிலவேண்டும், அதே போன்று நாளைக்கு யாருக்கு எதிராக தேர்தலில் போட்டியிடுகிறார்களோ அவர்களுடன் கூட்டும் சேருவார்கள் என்று அறிந்து இப்படி செயல்பட்டது வருத்தம் அளிக்கிறது. தேர்தலில் வாய்ப்பு கட்சி கொடுத்ததும் மக்கள் சீண்டாமல் ஒதுக்கியே வைத்திருக்கும் முடியரசர்களின் குடும்பம் விடா முயற்சியில் எப்படியெல்லாம் வாழ்கிறார்கள் என்று சற்று யோசித்திருக்கவேண்டும், மக்கள் ஒதுக்கினாலும் நாங்கள் உங்களுக்கு சேவை செய்வோம் என்று முழு மூச்சாக செயல்படுவோர்களிடம் அரசியல் என்ற பாடத்தைப்படிக்கவேண்டும், வந்தே மாதரம்

  • Manikandan Sivalingam - delhi,இந்தியா

    பத்திரிக்கை ஊடகவியல் இவர்களை ஆயிரம்முறை அடிக்கும்.... அடிப்படை....தகுதி..... மக்களுக்கு....வர.... வேண்டும்.....

  • கண்ணன்,மேலூர் -

    இப்படிப் பட்ட கோழைகள் .......

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement