மதுரையில் அமைச்சர் தியாகராஜன், தன் ஆதரவாளரான இந்திராணிக்கு தன்னிச்சையாக மேயர் பதவி பெற்றுத்தந்தது முதல், தற்போது வரை கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்த முயன்று வருகிறார். ஆனால், நகர செயலர் தளபதி, மதுரை வடக்கு மாவட்ட செயலரான அமைச்சர் மூர்த்தி, தெற்கு மாவட்ட செயலர் மணிமாறன் ஆகியோர் ஓரணியில் திரண்டு, அமைச்சர் தியாகராஜனின் ஆதிக்க ஆசைக்கு, 'செக்' வைத்தனர். இந்நிலையில், 'கட்சியே குப்பையாக கிடக்கிறது' என்ற அமைச்சர் தியாகராஜனின் விமர்சனத்திற்கு பின், மதுரையில் தி.மு.க., நிர்வாகிகள் கொந்தளித்துள்ளனர். அமைச்சர் ஆதரவாளர்கள் பலர், எம்.எல்.ஏ., தளபதி பக்கம் சாயத் துவங்கியுள்ளனர்.

இவர்களுக்கு நகர தி.மு.க., சார்பில் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., மாவட்ட நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அமைச்சர் என்றாலும், கட்சி சார்பில் மாவட்ட செயலர்கள் கூட்டம் நடத்தினால், அதில் பங்கேற்க வேண்டும் என்பது நடைமுறை. இதில், மேயரே பங்கேற்கவில்லை. அதனால் தான் அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அனைவரும் பதில் அளித்துள்ளனர். இதுகுறித்து கட்சி தலைமைக்கு முறைப்படி தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட செயலர்களின் இந்த, 'மாஸ்' நடவடிக்கையால், மதுரை தி.மு.க.,வில் இதுவரை கோலோச்சிய அமைச்சர் தியாகராஜனின் ஆதரவு கவுன்சிலர்கள், நிர்வாகிகள் கடும் கலக்கத்தில் உள்ளனர்.
மதுரையில் மூன்று தி.மு.க., மாவட்ட செயலர்களும் ஒன்றிணைந்து, கட்சியினருக்கு மதுரை பாண்டிகோவில், ரிங்ரோடு அருகே இன்று பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நவ., 29ல் தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி நலத்திட்டம் வழங்கும் விழா நடப்பதை முன்னிட்டு, நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்காக ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், முதல்வர் ஸ்டாலின் தி.மு.க., தலைவராக மீண்டும் தேர்வானதற்காக அமைச்சர் தியாகராஜன் மதுரையில் பிரமாண்ட பிரியாணி விருந்து வைத்தார். இதை, அமைச்சர் மூர்த்தி, தளபதி உள்ளிட்ட மா.செ.,க்கள், நிர்வாகிகள் புறக்கணித்தனர். இந்நிலையில், அதற்கு போட்டியாக தங்கள் ஆதரவாளர்களுக்காக, இந்த விருந்தை மா.செ.,க்கள் ஏற்பாடு செய்துள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
வாசகர் கருத்து (18)
இதில் எந்தெந்த ஆணிகள் தேவையானது என்று எப்படி முடிவு செய்வது என்ற கடின சோதனை தலைமைக்கு
இவர்களே தேவையில்லாத ஆணிகள் தான்
பேய்க்கும் பேய்க்கும் சண்டை
ஆனலப்பட சகோதரர் மாண்புமிகு முன்னாள் அமைச்சர் திரு மு க அழகிரியையே சாமாளித்து வெற்றிகண்ட கட்சிக்கு இது அப்படி ஒன்றும் பெரிதாக இருக்காது . நல்லதே நடக்கட்டும், ஐந்து ஆண்டுகள் சீரும் சிறப்புமாக ஆண்டு மக்களுக்கு நல்லது செய்யட்டும். வந்தே மாதரம்
இவர்களுக்கு கொண்டாட்டம். ஆடுகளுக்குத் திண்டாட்டம். கறி விருந்து பழனியாரின் சுவைக்கு உதவுமா ? எதிர் தரப்புக்கு விருந்தாகுமா ? கட்சிக்கு " அரோகரா " கொடுக்கப் பழனியார் திட்டமிட்டு விட்டார். தாமரைக்கு உற்சாகம் பொங்க வைத்து விட்டனர் இவர்களிருவரும்.