Load Image
dinamalar telegram
Advertisement

ஈஷாவில் முகமது ஷாரிக்கை பார்த்தேன்: கோவை கால் டாக்சி டிரைவர் பேட்டி

Tamil News
ADVERTISEMENT

கோவை: ''மங்களூரு குக்கர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி முகமது ஷாரிக்கை தீபாவளியன்று ஈஷா யோகா மையத்தில் பார்த்தேன்'' என கோவையைச் சேர்ந்த கால் டாக்சி டிரைவர் தெரிவித்துள்ளார்.

கோவை செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் ஆனந்த் 45; கால் டாக்சி டிரைவர். இவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் அக். 23ல் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன் கார் குண்டு வெடித்தது. அன்றும் அதற்கு மறுநாள் தீபாவளியன்றும் நான் சுற்றுலா பயணியரை அழைத்துக் கொண்டு ஈஷா யோகா மையம் சென்றேன்.

தீபாவளியன்று நான் அழைத்துச் சென்ற பயணியர் ஈஷா மையத்துக்குள் சென்று விட்டனர். நான் சாப்பிடுவதற்காக 'கேன்டீன்' சென்றேன். அப்போது சந்தன நிறத்தில் பூ போட்ட குல்லா அணிந்த வாலிபர் ஆதியோகி சிலை முன் 'செல்பி' எடுத்துக் கொண்டிருந்ததை கண்டேன். அவருடன் இரண்டு பேர் இருந்தனர்.

அவர்கள் ஈஷா மையத்தில் வெவ்வேறு இடங்களை போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். இந்த சம்பவம் குறிப்பிட்ட நாள் காலை 10:45 முதல் 11:00 மணிக்குள் நடந்தது. அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் இடம் என்பதால் நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
Latest Tamil News
ஆனால் இப்போது மங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்புடைய முகமது ஷாரிக் படம் பத்திரிகைகளில் வெளியானதை பார்த்தபோது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

குறிப்பிட்ட அந்த நபர் தான் தீபாவளியன்று ஈஷா மையத்தில் நான் பார்த்த நபர். இது பற்றி போலீசார் விசாரித்தால் நான் நேரில் கண்டது பற்றிய உண்மைகளை தெரிவிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பயங்கரவாதி முகமது ஷாரிக்கின் அலைபேசி 'வாட்ஸ் ஆப்' முகப்பு படமாக கோவை ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை இருந்தது போலீஸ் விசாரணையில் ஏற்கனவே தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கால் டாக்சி டிரைவர் அளித்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (11)

 • vpurushothaman - Singapore,சிங்கப்பூர்

  ஈஷா மையம் இவர்களுக்கும் ஒதுங்குமிடமாக உள்ளதே ? வனப் பகுதியை ஆக்கிரமித்து யானைகள் சூழ் கொள்ளுமிடத்தை சட்டபூர்வமாக அபகரித்து " ஆதி யோகி " வீற்றிருக்கிறார். இதில் புலன் விசாரணை முடுக்கி விடப்பட வேண்டும். மீண்டும் தும்பை விட்டு வாலைப் பிடிக்க முயலக் கூடாது.

  • RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்

   சரி , வேற என்ன செய்யணும் , டீடையலா சொல்லவும், பக்கத்திலேயே ஒரு பாவாடை வியாபார கடை இருக்குதே , கண்ணுக்கு தெரியுதா ? , அது என்ன சட்டபூர்வமாக அபகரித்த்து , சட்டபூர்வமாக என்றால் அபகரித்து எங்கே இருந்து வருகிறது

  • Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ

   உன்னை போல தனது காலையே தானே வெட்டும் கூட்டம் இருக்கும் வரை தேசம் உருப்படாது. பாவாடை கரையான் பக்கத்திலேயே ஒரு பெரிய கல்வி பண வர்த்தகம் நடத்துகிறான், நீ அதை பற்றி எழுதினாயா?

 • Lion Drsekar - Chennai ,இந்தியா

  நீதியை நீதியாக பெறவேண்டும் என்றால் ஒரே வழி சாட்சிகளை வைத்து அங்குக்கணக்கில் எல்லாத்துறையினரையும் மன உளைச்சலாக்கி, நேரத்தையும் வீணடித்து, முடிவில் விடுதலை என்ற நிலைக்கு வருவதால், எல்லாமே திரைக்கதை, வசனம் இயக்கம் போல் நடப்பதால் சட்டத்துக்கு வேறு வழி தெரியாமல் பழைய சட்டத்தின் சட்டத்துக்குட்பட்டு நீதி வழங்கவேண்டிய ஒரு நிலை, உண்மை மறைக்கப்படுகிறது. இதற்க்கு ஒரே வழி இது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவோர்களை உண்மைக் கண்டறியும் இயந்திரத்தின் வாயிலாக மட்டுமே விசாரணை செய்தால் மட்டுமே நீதி கிடைக்கும், ஒரே நாளில் பிரச்சனையும் தீரும், நிலுவையில் உள்ள பல லட்சம் கோடி வழக்குகளும் ஒரே மாதத்தில் முடிவுக்கும் வரும், வந்தே மாதரம்

  • விசு அய்யர் - Chennai ,இந்தியா

   அவுங்களுக்கு தெரியும்.. என்ன செய்ய அவர்களுக்கும் குடும்பம் குட்டி என இருக்கிறது தானே

 • Manguni - bangalore,இந்தியா

  திராவிட பாதுகாப்பாக தீவிரவாதம் செய்ய ஏற்ற ஆட்சி குற்றவாளிகளை அரணைத்து செல்லும் தாய் உள்ளம் இந்த திராவிட கும்பல்

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  கால் டாக்சி டிரைவர் இனி ஜாக்கிரதையாக, மிக மிக ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. காவலர்களை முற்றிலும் அவர் நம்புவது சரியல்ல. அவர்கள் கையெடுத்து விடுவார்கள் - அவர்கள் வேலையானவுடன் ...

 • கோகுல் -

  ஆட்டோ டிரைவரின் படத்தை நீக்குக

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement