சி.இ.ஓ., அலுவலகத்தில் தர்ணா நடத்த தீர்மானம்
மதுரை -மதுரையில் இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழக மாவட்ட செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் மாவட்ட செயலாளர் பீட்டர் ரவிக்குமார், இடைநிலை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் ராஜரத்தினம், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி முருகன் முன்னிலை வகித்தனர்.
இதில் கல்வித்துறை சீரமைப்பிற்கு பின் உதவிபெறும் பள்ளிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் பலருக்கு இதுவரை அக்டோபர் சம்பளம் வழங்கப்படவில்லை.
இதை கண்டித்து நவ.,28 ல் சி.இ.ஓ., அலுவலகத்தில் மாலை நேர தர்ணா நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு நிதிக் காப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!