Load Image
dinamalar telegram
Advertisement

கருப்பு சட்டை அணிந்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Tamil News
ADVERTISEMENT


மதுரை,-அரசு ஊழியர்கள், அகவிலைப்படியை ஆறுமாதங்கள் தள்ளி அரசு அறிவிப்பதை கண்டித்தும், ஜூலை 1ல் அறிவித்த அகவிலைப்படியை அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு உடனே வழங்க வலியுறுத்தியும் வருகின்றனர். இதையடுத்து சங்க மாநில செயற்குழு கூட்டத்தில், மாவட்ட தலைநகரங்களில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர்.

நேற்று மாலை மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் கல்யாணசுந்தரம், மணிகண்டன், ஆறுமுகம், மனோகரன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் கோரிக்கையை விளக்கினார். டான்சாக் அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ், கிராம சுகாதார செவிலியர் சங்க மாநில துணைத் தலைவர் சின்னப்பொண்ணு, சரவணன், அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயலாளர் பரஞ்ஜோதி உட்பட பலர் பேசினர்.

மாவட்ட பொருளாளர்மாரியப்பன் நன்றி கூறினார். கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

உசிலம்பட்டி



அரசு ஊழியர் சங்கக் கட்டடம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழாவும், வட்ட பேரவை கூட்டமும் நடந்தது. கிளை தலைவர் அய்யங்காளை தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நீதிராஜா, வட்ட செயலாளர் ஆசை, பொருளாளர் இந்திராணி, மாவட்ட துணைத் தலைவர் மனோகரன், சிறப்பு விருந்தினராக சங்க பொதுச்செயலாளர் செல்வம் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement