Load Image
dinamalar telegram
Advertisement

அமைச்சர் பெயரில் அதிகாரி ரூ.2.75 கோடி வசூல்!

Tamil News
ADVERTISEMENT
''அமைச்சருக்கு தரணும்னு வசூல் பண்ணியிருக்காரு வே...'' என, கடைசி தகவலுக்கு தாவிய அண்ணாச்சியே தொடர்ந்தார்...

''பெரம்பலுார் மாவட்டத்துல, 55 கல் குவாரிகள் அரசு அனுமதியுடன் இயங்கிட்டு இருக்கு... இங்க விதிமுறைகளை மீறி, வெடி வச்சு கற்களை எடுத்து, கோடிக்கணக்குல சம்பாதிக்காவ வே...

''கனிமவளத் துறை அதிகாரிகள், மாதாந்திர கப்பத்தை வாங்கிட்டு கமுக்கமா போயிடுதாவ... சமீபத்துல, துறையின் அமைச்சர் துரைமுருகன் மற்றும் கமிஷனர் ஜெயகாந்தன் ஆகியோருக்கு தரணும்னு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம், 55 குவாரிகள்லயும், 2.75 கோடி ரூபாயை கனிமவளத் துறை அதிகாரி வசூல் பண்ணியிருக்காரு...
Latest Tamil News
''இதெல்லாம் நிஜமாவே மேலிடத்துக்கு தானான்னு தெரியாம குவாரி உரிமையாளர்கள் மண்டை காய்ஞ்சு போய் கிடக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''அது சரி... இந்த ஆட்சியில யாரும், 'சத்தியசீலனா' இருக்க முடியாது போல ஓய்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.


வாசகர் கருத்து (3)

  • Sri Ra - Chennnai,இந்தியா

    குபேர பட்டணம் கொள்ளை போகும் பொது அடிக்காதவன் முட்டாள்

  • Lion Drsekar - Chennai ,இந்தியா

    சாராயக்கடைகளில் வசூலிக்கப்படும் பல லட்சம் கோடி ? மக்களுக்காக அதிக விலைக்கு விற்கப்படுகிறதோ ? பாராட்டுக்கள், ஊருக்கே தெரியும், உலகுக்கு தெரியும் , தெரிந்து என்ன பயன், நடப்பதுதான் நடந்து கொண்டு இருக்கிறது ஆகவே நம் பதிவுகள் ஒன்றும் நாட்டை திருத்தமுடியாது , நம் கருத்துக்கள் நம்மிடம் சக வாசகர்களிடம் தேவையில்லாத பகையை மட்டுமே உருவாக்கும், பதிவுகளுக்கு முக்கியத்துவம் தராமல் நாமெல்லாம் ஒன்றாக இணைந்து செயல்பட்டு " சிறிது வாழவேண்டும் தவிர , பிறர் சிரிக்க வாழாமல் இருக்கவேண்டும், வந்தே மாதரம் .

  • raja - Cotonou,பெனின்

    அப்புறம் மங்குனி மந்திரிகள்....

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement