Load Image
dinamalar telegram
Advertisement

போலீஸ் செய்திகள்......

Tamil News
ADVERTISEMENT


வீட்டில் திருட்டு

திருமங்கலம்: திருமங்கலம் ஆண்டவன் கோயில் தெருவை சேர்ந்தவர் டிரைவர் தேசிங்கு ராஜா 48. மனைவி ராதா 45, மகன் நந்தகுமார் 20. நேற்றுமுன்தினம் தேசிங்கு ராஜா, ராதா வேலைக்கு சென்று விட்டனர். நந்தகுமார் கல்லுாரிக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு பவுன் நகை, வெள்ளி கொலுசு, ரூ. 15 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

வழிப்பறி கொள்ளையில் மூவர் கைது

திருமங்கலம்: கப்பலுார் சொக்கநாதன்பட்டி முத்துக்கண்ணன் 32. நவ., 20ல் சொக்கநாதன் பட்டி விலக்கருகே 3 பேர் வழிமறித்து கத்தியைக் காட்டி ஏ.டி.எம்., கார்டை பறித்தனர். பின்னர் ஏ.டி.எம்., சென்று ரூ.3500 எடுத்துக்கொண்டு தப்பினர். இதுதொடர்பாக புளியங்குளம் சசிகுமார் 20, அருண் 23, கருப்பசாமியை 22, திருமங்கலம் நகர் போலீசார் கைது செய்தனர்.

- மது விற்றவர்கள் கைது

பேரையூர்: சிலைமலைப்பட்டி அஜீத் 27. வன்னிவேலம்பட்டி சங்கர் 50. இருவரும் டி.கல்லுப்பட்டியில் அரசு அனுமதியின்றி மது விற்றதாக கைது செய்யப்பட்டனர். 14 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

-- டூவீலர் திருடர்கள் கைது

திருமங்கலம்: இப்பகுதியில் சில மாதங்களாக இரவில் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த 13 டூவீலர்கள் திருடப்பட்டன. இதுதொடர்பாக மம்சாபுரம் பால்பாண்டி 30, விஜய்யை 23, இன்ஸ்பெக்டர் லதாலட்சுமி, எஸ்.ஐ., மாரிகண்ணன் கைது செய்தனர். --------12 டூவீலர்கள் மீட்கப்பட்டன. போலீசாரை எஸ்.பி., சிவபிரசாத் பாராட்டினார்.

கஞ்சாவுடன் கைது

பேரையூர்: விருதுநகர் மாவட்டம் வன்னியம்பட்டி மணிபாண்டி 26. பேரையூர் தாலுகா பூசலபுரம் நந்தகுமார் 19. இருவரும் பூசலபுரத்தில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மாமனார், மருமகள் பலி

எழுமலை: பேரூராட்சி 15 வது வார்டில் நவ.,17 காலை அடுப்பை பற்ற வைத்தபோது காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் அனிதா 22, அவரை மீட்கச்சென்ற மாமனார் நாகராஜ் 57, பலத்த தீக்காயமடைந்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இரண்டு நாட்களுக்கு முன் அனிதா இறந்தார். நேற்றுமுன்தினம் அவரது மாமனாரும் இறந்தார்.

கார் மோதி காயம்

பேரையூர்: திருமங்கலம் சோலை மீனா நகர் அப்பாஸ் மகன் ஆசாரிதீன் 29. மொத்த விற்பனை கடை ஊழியர். டூவீலரில் (ஹெல்மெட் அணிந்திருந்தார்) பேரையூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு ஊதுபத்தி விநியோகம் செய்துவிட்டு சாப்டூர் ரோட்டில் வந்தபோது, எதிரே வந்த கார் மோதியதில் காயமடைந்தார். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். டிரைவர் செம்பட்டி ராஜசேகரிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

மாடியில் இருந்து குதித்து தற்கொலை

உசிலம்பட்டி: இப்பகுதி ஒச்சாத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் தமிழ்த்தாய் 69. பக்கத்து வீட்டில் வசிக்கும் நல்லு குடும்பத்தினருடன் இடத்தகராறு இருந்தது. இடத்தை சர்வே செய்ய வரும் அதிகாரிகளை அளக்கவிடாமல் நல்லு குடும்பத்தினர் தடுத்து வந்தனர். நவ.,23 காலை அதிகாரிகளை தடுத்ததால் மற்றொரு நாள் வருவதாக கூறிச்சென்றனர். இதனால் மனமுடைந்த தமிழ்த்தாய் வீட்டின் மாடியில் இருந்து குதித்தார். காயமடைந்து சிகிச்சையில் இருந்தவர் நேற்று இறந்தார். மகன் தீபன்சக்கரவர்த்தி புகாரில் தற்கொலைக்கு துாண்டியதாக நல்லு, மனைவி சந்தனதேவி, மகள் லட்சுமி, மருமகன் இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாணவர்கள் கோஷ்டி மோதல்

உசிலம்பட்டி: எழுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பஸ்சில் வருவதில் அக்.,27 ல் தகராறு ஏற்பட்டது. எம்.கல்லுப்பட்டி, பாப்பிநாயக்கன்பட்டி, சூலப்புரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரு தரப்பினராகவும், சீல்நாயக்கன்பட்டி மாணவர்கள் ஒரு தரப்பினராகவும் பிரிந்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த பிளஸ் 2 மாணவர்களிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் சீல்நாயக்கன்பட்டி மாணவர் ஒருவருக்கு மண்டை உடைந்தது. சூலப்புரம், பாப்பிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 3 மாணவர்கள் மீது எழுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

-------- டூவீலர் - ஆட்டோ மோதி மாணவர் பலி

மேலுார்: மதுரை சிக்கந்தர்சாவடி பிரவீன் 17. தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர். நேற்று காலை டூவீலரில் கல்லுாரிக்கு சென்றார். ஹெல்மெட் அணியவில்லை. அழகர்கோவில் அருகே பஸ்சுக்கு காத்திருந்த சக நண்பர்கள் ஆனையூர் சரவணன் 17, கோரிப்பாளையம் முகமது பயாஸ் 17, ஆகியோரை டூ வீலரில் அழைத்துச் சென்றார். அழகாபுரி அருகே முன்னால் சென்ற பஸ்சை பிரவீன் முந்த முயற்சித்தார். அதேநேரம் எதிரே வந்த ஆட்டோவும் டூவிலரும் நேருக்கு நேர் மோதின. இதில் சரவணன் இறந்தார். மற்றவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement