Load Image
dinamalar telegram
Advertisement

ஏலக்காய் வரத்து இல்லாத போதும் விலை குறைவால் விவசாயிகள் கவலை



கம்பம்--மார்க்கெட்டிற்கு காய் வரத்து இல்லாத போதும், ஏலக்காய் விலை தொடர்ந்து குறைவதால் விவசாயிகள் புலம்பி வருகின்றனர்.

சர்வதேச மார்க்கெட்டில் இந்திய ஏலக்காய்க்கு கிராக்கி இருந்த போதும், விலையில் நம்மால் குவாதிமாலா நாட்டு ஏலக்காயுடன் போட்டி போட முடியலில்லை.

மானாவாரி நிலங்களில் ஏலக்காய் விளைவதால், அந்தாட்டு ஏலக்காய் விலை குறைவாக கொடுக்கின்றனர்.

இந்நிலையில் இந்தியாவில் ஏலக்காய் விலை கடந்த ஓராண்டிற்கும் மேலாக சராசரி விலை கிலோ ரூ.1000 என இருந்தது. ரூ.50 முதல் 100 வரை ஏற்ற இறக்கம் இருந்தது. ஆனால் சில மாதங்களாக தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது.

தோட்டங்களில் காய் வரத்து இல்லாத போதும், ஏல மையங்களில் ஒரு நாளைக்கு நடக்கும் இரண்டு ஏலங்களில் குறைந்தது 80 ஆயிரம் கிலோ முதல் ஒரு லட்சம் கிலோ வரை விற்பனைக்கு வருகிறது.

சராசரி விலை நவ. 23 ல் ரூ.821 ஆக குறைந்தது. இது விவசாயிகளை கடுமையாக பாதிக்கும். ஏலக்காய் வர்த்தகத்தில் நிலவும் மூடுமந்திரங்களால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். ஏல விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்க மத்திய வர்த்தக அமைச்சகம் நடவடிக்கை எடுக்க ஏல விவசாயிகள் இமெயிலில் கோரிக்கை மனு அனுப்பினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement