ADVERTISEMENT
தேனி-'தேனி மாவட்டத்தில் மத்திய அரசின் பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் இதுவரை 44,654 விவசாயிகள் பயன்பெற்று வருவதாக',
என தேனி வேளாண் இணை இயக்குனர் செந்தில் குமார் தெரிவித்தார்.
தேனி மாவட்டம் நல்ல நீர் வளம், நில வளம் கொண்ட பொன் விளையும் பூமியாகும். இங்கு இங்கு ஆண்டுமுழுவதும் பயிர்சாகுபடி சிறப்பாக நடக்கும். பெரும்பாலான மக்கள் விவசாயத்தை முழுநேரமாக மேற்கொண்டு கொண்டுள்ளனர
இம் மாவட்டத்தின் விவசாயம் குறித்தும், திட்டங்கள் குறித்து தினமலர் அன்புடன் அதிகாரி பகுதிக்காக இணை இயக்குனர் செந்தில்குமார் பேசியதாவது:
மாவட்டத்தில் சாகுபடி பரப்பளவு எவ்வளவு
தேனி மாவட்டத்தில் நெல் 9 ஆயிரம் எக்டேரிலும், சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட தானிய வகைகள் 17,890 எக்டேரிலும் உளுந்து, கொள்ளு உள்ளிட்ட பயிறு வகைகள் 14 ஆயிரம் எக்டேரிலும், எண்ணெய் வித்துக்கள் 5750 எக்டேரிலும், பருத்தி 3ஆயிரம், கரும்பு 3500 எக்டேர்களில் சாகுபடியாகிறது.
தரிசு நிலங்கள் விளைநிலங்களாக மாற்றும் திட்டம் பற்றி தரிசு நில மேம்பாட்டுத்திட்டத்தில் நடப்பாண்டில் தரிசு பட்டா நிலங்கள் 276 எக்டேர் விளை நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது. தரிசு நிலங்களை விவசாய நிலங்களாக மாற்ற ஒரு எக்டேருக்கு ரூ.13,400 மானியம் வழங்கப்படுகிறது.
அந்த நிதியில் விவசாயிகள் தரிசு நிலத்தில் உள்ள புதர்களை அகற்றி உழவு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
மாவட்டத்திற்கு உர தேவை எவ்வளவு உழவுப்பணிகள் மேற்கொள்ள ஆண்டுக்கு யூரியா 12,240 டன், டி.ஏ.பி.,2800 டன், பொட்டாஷ் 5,360 டன், கலப்பு உரங்கள் 17, 700 டன் தேவைப்படுகிறது. தற்போது போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளது.
கடைகளில் விவசாயிகள் உரம் வாங்கும் போது ஆதார் எண் வழங்கி உரம் வாங்க வேண்டும். அவ்வாறு வாங்குவதால் பதுக்கல், தேவையற்ற பயன்பாட்டிற்கு உரம் வாங்குவது தடுக்கப்படும்.
பிரதம மந்திரி கிஷான் திட்டத்தில் எத்தணை விவசாயிகள் பயன்பெறுகிறார்கள்
மாவட்டத்தில் இதுவரை 44,654 பேர் பி.எம்., கிஷான் திட்டத்தில் பயன் பெறுகின்றனர். ஆண்டுக்கு மூன்று முறை தலா ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும். இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ளது. 13 வது தவணை வழங்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த உரமேலாண்மை பற்றிவிவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள மண்ணின் தன்மைக்கேற்ப உரமிட வேண்டும். அதை தவிர்த்து ஆலோசனையின்றி உரமிட்டால் பயிர் பாதிப்புடன் மண்ணின் தன்தை மாறுபடத் துவங்கும். இதனால் அனைத்து விவசாயிகளும் மண்பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்துகிறோம்.
இடுபொருட்கள் விற்பவர்களுக்கு ஆலோசனைஉரம், பூச்சி மருந்து, விதைகள் விற்பனை செய்யும் வியபாரிகள் கடைகளில் இருப்பு அளவை பார்வையில் தெரியும் வகையில் பலகையில் எழுதி வைக்க வேண்டும்.
குறைந்தபட்ச விலையை விட கூடுதலாக விற்ககூடாது. தடை செய்த பூச்சி மருந்துகளை விற்க செய்யக்கூடாது. உரிய ஆவணங்கள் இன்றி உரங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதிக உரம் வாங்கினால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
ஒருங்கினைந்த பூச்சி மேலாண்மை திட்டம் பற்றிவிவசாயிகள் வயலில் வரப்பு ஓரங்களில் ஒரு பூச்சி தென்பட்டாலே பூச்சி மருந்து தெளிக்கின்றனர்.
அதிலும் வீரியம் அதிகமுள்ள இரண்டு, மூன்று மருந்துகளை கலந்து அடிக்கின்றனர். அவ்வாறு செய்வதால் பூச்சிகள் உடனே மரணமடைந்தாலும் தப்பிக்கும் பூச்சிகள் அடுத்த ஆண்டு அந்த மருந்தின் வீரியத்தை தாங்கும் வகையில் பூச்சிகளை உற்பத்தி செய்யும்.
அதனால் வயலில் பூச்சிகளை கண்டால் அதனை கையால் அகற்ற வேண்டும். பூச்சிகள் அதிகரிக்கும் போது வீரியம் குறைந்த மருந்துகளை பயன்படுத்திட வேண்டும். இதுகுறித்த அதிகாரிகளிடம் ஆலோசித்து மருந்துகளை தெளிக்க வேண்டும்.
விவாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதா
'அட்மா' திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கிராமங்கள் தோறும் வட்டார வேளாண் அலுவலர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்ட, மாநில, வெளி மாநிலங்களிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. செயல் விளக்க திடலில் விளக்கம் கொடுக்கப்படுகிறது. விவசாயம் குறித்து விவசாயிகள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஆலோசனை
மருந்து தெளித்த உடனே அல்லது தெளிக்கும் போது உணவுப்பொருட்களை உண்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு தெரியும்படி பூச்சி மருந்துகளை வைக்க கூடாது.
நிலங்களில் மருந்து தெளிக்கும் போது பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்த வேண்டும். ஒரே வகையான சாகுபடி செய்யாமல் சுழற்சி முறையில் பயிரிட வேண்டும் என்றார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!