Load Image
dinamalar telegram
Advertisement

பெரியகுளத்தில் 10 மாதங்களாக உதவி மின் பொறியாளர் பணியிடம் காலி ஒயர்மேன் பற்றாக்குறையால் சிரமம்



பெரியகுளம்--பெரியகுளத்தில் உதவி மின் பொறியாளர்கள், ஒயர்மேன்கள் பற்றாக்குறையால் மின் நுகர்வோர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

பெரியகுளம் நகர் மற்றும் கீழவடகரைப் பகுதியில் வீடு, வணிகம், தொழிற்சாலை, விவசாய மோட்டார்கள் என 30 ஆயிரத்திற்கும் அதிகமாக மின் இணைப்புகள் உள்ளது.

நகர் பகுதியில் பணியாற்றிய உதவி மின் பொறியாளர் பூமதி, கீழ வடகரை உதவி மின் பொறியாளர் ஜான் இருவரும் வெவ்வேறு ஊர்களுக்கு பணி மாறுதலில் சென்று 10 மாதங்களாகிறது. இதனால் தேவானப்பட்டி உதவி மின் பொறியாளர் சுரேஷ் கண்ணா நகர் பகுதிக்கும், பெரியகுளம் துணை மின் நிலையம் உதவி மின் பொறியாளர் தீபா கீழ வடகரைக்கும் பொறுப்பில் உள்ளனர். இதனால் தேவதானப்பட்டியில் உள்ள உதவி பொறியாளர் பெரியகுளத்திற்கு எப்போதாவது வந்து செல்கிறார்.

இதனால் புதியமின் இணைப்பு, பெயர் மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்காக நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

சில நாட்கள் நுகர்வோர் தேவதானப்பட்டி சென்று உதவி பொறியாளரை சந்தித்து தீர்வு காண வேண்டியுள்ளது. குறைதீர் கூட்டத்தில் உதவி பொறியாளர் நியமிக்க வியாபாரிகள், வர்த்தகர்கள் பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

ஒயர்மேன் பற்றாக்குறை: பெரியகுளம் பகுதிகளில் ' ஏ மண்டலம்' முதல் 'ஜி மண்டலம்' வரை ஏழு மண்டலங்களில் தலா ஒரு ஒயர்மேன், அவருக்கு உதவியாக தலா ஏழு உதவியாளர்கள் பணியில் இருந்தனர்.

தற்போது 3 ஒயர்மேன்கள், அவர்களுக்கு உதவியாக இரண்டு கேங்மேன்கள் மட்டும் உள்ளதால், தென்கரை வடகரை பகுதிகளில் பியூஸ் ஏற்பட்டால் பழுது நீக்குவதில்

தாமதம் ஏற்படுகிறது. உதவி பொறியாளர், ஒயர்மேன் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement