Load Image
dinamalar telegram
Advertisement

சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.17. 5 லட்சம் மானியம் விவசாயிகளிடம் ஆர்வமில்லை



கம்பம்- -சிப்பம் கட்டும் அறை அமைக்க 35 சதவீத மானியம் ரூ.17.5 லட்சம் வழங்க தயாராக இருந்தும் விவசாயிகள் முன்வரவில்லை.

தோட்டக்கலைத்துறை சார்பில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களில் மானியம் வழங்கப்படுகிறது. ஏற்றுமதிக்கு தரம் பிரித்து, சுத்தப்படுத்தி பேக்கிங் செய்ய சிப்பம் கட்டும் அறை கட்ட தோட்டக்கலைத்துறை திட்டம் அறிவித்துள்ளது. 8 மீ. மற்றும் 19 மீ.நீள அகலத்தில் அறை கட்டி அதில் தரம் பிரித்தல், பேக்கிங் செய்ய வசதி, தண்ணீரில் கழுவும் வசதி உள்ளிட்ட பல வசதிகள் அடங்கிய பேக் ஹவுஸ் கட்டவேண்டும்.

ரூ.50 லட்சம் செலவில் கட்டும் இந்த பேக் ஹவுசிற்கு 35 சதவீத மானியம் அதாவது ரூ.17.5 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது.

கம்பம் வட்டாரத்திற்கு ஒரு பேக் ஹவுஸ் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் விவசாயிகள் யாரும் முன்வராத நிலை உள்ளது.

இது தொடர்பாக கம்பம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பாண்டியன் ராணா கூறுகையில், "பேக் ஹவுஸ் கட்ட அனுமதி கிடைத்துள்ளது. விவசாயிகளிடம் ஆர்வம் குறைவாக உள்ளது.

பேக் ஹவுசில் வாழை, காய்கறி பயிர்களை தரம் பிரித்து ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் முன்வர வேண்டும்" என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement