Load Image
dinamalar telegram
Advertisement

அரசின் செயல்பாடு மந்தம்: தி.மு.க., - எம்.பி., கடிதம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை: 'போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த முடிவுகளை செயல்படுத்துவதில், அரசு மந்தமாக உள்ளதால், தொழிலாளர்கள் சோர்வடைந்து உள்ளனர்' என, தி.மு.க., - எம்.பி., சண்முகம் தெரிவித்துள்ளார்.

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கான, 14வது ஊதிய ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு, மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஒப்பந்தத்தில் முடிவான பல விஷயங்கள் இன்னும் செயல்படுத்தப் படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள கூட்டுக்குழு சங்கத்தினர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தி.முக., ராஜ்யசபா எம்.பி.,யும், தொ.மு.ச., பொதுச் செயலருமான சண்முகம், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கருக்கு அனுப்பியுள்ள கடிதம்: ஊதிய ஒப்பந்தத்தின்படி, நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் பணியாற்றியோருக்கு, 300 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை.

Latest Tamil News
வேலை நிறுத்த நாட்களை, பணி நாட்களாக்க ஒப்புதல் அளித்த நிலையில், 2014ல் நடந்த நான்கு நாள் ஸ்டிரைக்குக்கு, ஒரு நாள்; 2017ல் நடந்த நான்கு நாள் ஸ்டிரைக்கிற்கு இரண்டு நாட்கள் மட்டுமே கணக்கில் எடுக்கப்பட்டு உள்ளது.

பதவி உயர்வு தொடர்பாக அளித்த ஒப்புதல்கள், செயல்படுத்தப்படவில்லை. ஓய்வூதியரின் அகவிலைப்படி உயர்வு, பணியில் இறந்தோர், விருப்ப ஓய்வு பெற்றோர், உடல் நல பாதிப்பால் விடுவிக்கப்பட்டோருக்கு, பணப் பலன்கள் வழங்கப்படவில்லை.

நிலையாணை, குடும்ப நலநிதி பிரச்னைகளில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்களிடம் சோர்வு ஏற்பட்டுள்ளது. உரிய நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


வாசகர் கருத்து (28)

  • madhavan rajan - trichy,இந்தியா

    தற்போதைய முதல்வர் மக்களின் சோதனைகளை தங்கள் அரசின் சாதனைகளாக எழுதிக்கொடுப்பதை படிப்பதோடு சரி. கூடவே தொண்ணூறு சதவிகிதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று போலி தம்பட்டம் வேறு. தங்கள் குடும்பத்தின் சொத்து தவிர வேறு ஏதும் உயர்ந்ததாக தெரியவில்லை. ஆட்சி அமைக்க வாக்களித்த மக்களை இதைவிட ஒரு அரசு துன்புறுத்த முடியாது. இவ்வளவும் பட்டாலும் தமிழக மக்களுக்கு புத்தி வருமா என்பது தெரியாது. மீண்டும் குவார்ட்டருக்கும் பணத்துக்கும் ஆசைப்பட்டு மீண்டும் இவர்களுக்கே வாக்களித்தால் ஆச்சரியப்பட வேண்டாம்.

  • Narayanan - chennai,இந்தியா

    இப்போது திமுகவில் இருக்கும் அனைவருக்குமே இந்த ஆட்சியின்பால் அதிருப்ப்திதான் நிலவுகிறது . ஸ்டாலின் தனது பதவியை காப்பற்றிக்கொள்ள யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் இருதலைக்கொள்ளியாக இருக்கிறார் . அவனவன் காசுபார்ப்பதில் குறியாக இருக்கிறார்கள் . கப்பம் ஒழுங்காக வரமட்டுமே தலைமை பார்க்கிறது .

  • duruvasar - indraprastham,இந்தியா

    இப்படி ஒரு நிலைமையை உருவாகினால்தான் தனியாரிடம் கொடுக்கமுடியும் , முதலில் ஆவினுக்கு தெவசம் அடுத்தது பஸ்க்குத்தான். கொஞ்சம் பொறுமையாக இருங்க .

  • Tamilnesan - Muscat,ஓமன்

    ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் முன் இந்த எம்பிக்கு தக்க பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும்.

  • Kumar - Madurai,இந்தியா

    இந்த மாதிரி துறையை தனியாரிடம் கொடுத்துவிட்டு போங்கள். எந்தப் பேருந்திலும் செல்ல முடியவில்லை. ஓட்டை ,ஒடசலாக இருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்