டாக்டர் வராததை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கம்பம்,- -காமயகவுண்டன் பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக பொதுமக்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள்,
காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் சுகாதார நிலைய சேவை குறைபாட்டை கண்டித்தும், இங்கு பணியில் உள்ள டாக்டரின் நடவடிக்கையை கண்டித்தும் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.
நேற்று காலை 10:00 மணி வரை டாக்டர் பணிக்கு வரவில்லை. சிகிச்சைக்கு வந்த பொதுமக்கள் இதை கண்டித்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராயப்பன்பட்டி போலீசார் சமாதானம் செய்தனர். தகவலின்பேரில் துணை இயக்குனர் மருத்துவ அலுவலர் பொறுப்பிற்கு சிலமலை மருத்துவர் ஜான்சி ராணியை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!