Load Image
dinamalar telegram
Advertisement

தேனி - --போடி இடையே ரயில்வே கேட், சிக்னல்கள், குறித்து அதிகாரிகள் ஆய்வு

Tamil News
ADVERTISEMENT


போடி-தேனி -- போடி அகல ரயில்பாதை பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளதால் ரயில்வே கேட், சிக்னல்கள், ரயில்வே ட்ராக் பாய்ண்ட் குறித்து அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

மதுரை - போடி அகல ரயில் பாதை பணியில் தேனி வரை 75 கி.மீ., துார பணி முடிந்து- தேனி வரை பயணிகள் ரயில் தினமும் இயக்கப்படுகிறது.

அதன்பின் தேனி - போடி அகல ரயில்பாதைக்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து நிறைவு பெறும் நிலைக்கு வந்துள்ளது.

இதில் தண்டவாளத்தில் ரயில் வரும் போது அதிர்வுகள், விரிசல் போன்றவை உள்ளதா என அறிந்து கொள்ளும் வகையில் நேற்று தேனி - போடி அகல ரயில் பாதையில் அமைக்கப்பட்டுள்ள சிக்னல் பாய்ண்ட்கள், கேட் செயல்பாடுகள், ஸ்டேஷனில் உள்ள சிக்னல்கள், 8 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே ட்ராக் பாய்ண்ட்கள், ரயில்வே கேட் பாதுகாப்புகள் குறித்து சோதனை செய்ய ஆய்வு நடந்தது.

இதற்காக தேனி- போடி வரை 10 கி.மீ., வேகத்தில் ரயில் என்ஜின் இயக்கப்பட்டது. இதில் ரயில்வே சிக்னல்கள், கேட், ட்ராக் பாய்ண்ட்கள் குறித்து மதுரை கோட்ட ரயில்வே முதன்மை பொறியாளர்

இளம்பூரணன், துணை முதன்மை பொறியாளர் சூர்யமூர்த்தி, துணை முதன்மை பொறியாளர் சுதிர்குமார் (சிக்னல்) நிர்வாக செயற்பொறியாளர் சுரேஷ் (சிக்னல்) உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சிக்னல் பாய்ண்ட்கள், ட்ராக் குறித்து முழுவதும் ஆய்வு செய்து உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அளிக்கப்படும்.

அதன் பின் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு செய்து ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement