Load Image
dinamalar telegram
Advertisement

தொழிற்பயிற்சி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

Tamil News
ADVERTISEMENT


பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழிற்பயிற்சி பெற்ற 25 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.

தமிழக அரசு கல்வித்துறையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நேரடி உள்ளூறை பயிற்சி திட்டத்தை இந்த ஆண்டு புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி, பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், அடிப்படைஇயந்திரவியல் பிரிவில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்கள் 25 பேர், சிதம்பரத்தில் உள்ள ஹீரோ, ஹோண்டா மற்றும் கார் சர்வீஸ் கம்பெனிகளில், ஐந்து நாட்கள் நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா பள்ளியில் நேற்று நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். துணை சேர்மன் முகமது யூனுஸ் முன்னிலை வகித்தார். தொழிற்கல்வி ஆசிரியர்உதயகுமார் வரவேற்றார்.

தொழிற்பயிற்சி பெற்ற 25 மாணவர்களுக்கு, சேர்மன் தேன்மொழி சங்கர் சான்றிதழ் வழங்கிபாராட்டினார்.

விழாவில், தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சங்கர், கவுன்சிலர்கள் தையல்நாயகி கணேசன், செழியன், ஆனந்தன்,தொழிற்கல்வி பயிற்றுநர் இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement