உடல் நலக்குறைவு; கர்ப்பிணி சாவு
நெல்லிக்குப்பம் : உடல் நலக் குறைவால் கர்ப்பிணி பெண் இறந்தார்.
நெல்லிக்குப்பம் பெரிய சோழவல்லியை சேர்ந்த ஜோசப் மனைவி மோனிஷா, 26. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. 2 வயதுள்ள வர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.
தற்போது, மோனிஷா கர்ப்பமாக உள்ள நிலையில் அடிக்கடி உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, மோனிஷாவுக்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு மோனிஷா இறந்தார்.
நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த மோனிஷாவுக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், அவரது இறப்பு குறித்து தாசில்தார விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!