Load Image
dinamalar telegram
Advertisement

புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த நாள் விழா

Tamil News
ADVERTISEMENT
நெல்லிக்குப்பம் : தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் நெல்லிக்குப்பம் கிளை சார்பில், காராமணிக்குப்பத்தில், புட்டபர்த்தி சாய்பாபாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவில், சாய்பாபாவின் படம் அலங்கரித்து வைக்கப்பட்டு பஜனை நடந்தது. சாய்பாபா நிகழ்த்திய அற்புதங்கள், சமூக சேவைகள், மருத்துவ சேவைகள் குறித்த சத்சங்கம் நடந்தது.

தொடர்ந்து, சாய்பாபா படத்துக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கிளை தலைவர் ரமணி அய்யர், செயலாளர் ஜெயக்குமார் அய்யர், பொருளாளர் சேனாபதி குருக்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement