விவசாய தொழிலாளர்கள் ஊர்வலம்
ஒட்டன்சத்திரம்--ஒட்டன்சத்திரத்தில் நடக்கும் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட மாநாட்டை ஒட்டி ஊர்வலம் நடந்தது.
மாநிலத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ.,லாசர் துவக்கினார்.இதேயொட்டி தாராபுரம் ரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் வசந்தாமணி தலைமை வகித்தார்.
வரவேற்பு குழு பொருளாளர் கருணாகரன் வரவேற்றார்.
மாநிலத் தலைவர் லாசர் மாநில பொருளாளர் சங்கர் மாவட்ட செயலாளர் அருள் செல்வன் பேசினர். சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் கணேசன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் ராமசாமி ஒன்றிய செயலாளர் மனோகரன் பங்கேற்றனர். ஒன்றிய செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!