Load Image
dinamalar telegram
Advertisement

சின்னாளபட்டியில் அனுமதியின்றி காப்பீட்டு முகாம்



சின்னாளபட்டி---சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் அனுமதியின்றி நடந்த காப்பீட்டு அட்டை பதிவு முகாமில் இலவச சேவைக்கு வசூல் புகார் எழுந்துள்ளது.

முதல்வர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு முகாம், சின்னாளபட்டியில் நவ. 24 முதல் டிச.5 வரை நடப்பதாக ஆட்டோ மூலம் சிலர் விளம்பரப்படுத்தினர்.

பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த முகாமில் கலந்து கொண்ட மக்களிடம் தலா ரூ.60 வீதம் 300க்கு மேற்பட்டோரிடம் கட்டணம் வசூலித்தனர்.

தகவலறிந்த செயல் அலுவலர் நந்தகுமார் அறிவுறுத்தலில் முகாம் ரத்து செய்யப்பட்டது.

பா.ஜ.,மண்டல் தலைவர் விக்கேஷ் கூறியதாவது:எந்த அனுமதியும் பெறாத சூழலில் பிரதமர் நரேந்திர மோடி படத்தை பயன்படுத்தி இலவச முகாமிற்கு வசூல் செய்துள்ளனர்.

அரசு அலுவலகத்தில் நடந்த முகாமில் வசூலுக்கு அனுமதித்த பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் புகார் செய்ய உள்ளோம், என்றார்.

செயல் அலுவலர் நந்தகுமார் கூறியதாவது:முகாமிற்கு எவ்வித அனுமதியும் பெறவில்லை.தகவல் அறிந்த உடன் முகாம் ரத்து செய்யப்பட்டது.

அலுவலக வளாகத்தில் முகாம் நடத்தியது தொடர்பாக விசாரிக்கப்படும்,என்றார்.

அரசு காப்பீட்டு திட்ட மாவட்ட அலுவலர் சிவக்குமார் கூறியதாவது: ரேஷன் கார்டு வாரியாக 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு இலவசமாக காப்பீடு அட்டை தனித்தனியே வழங்கப்படுகிறது.

இதற்கென அரசு சார்பில் தலா ரூ.10 வழங்குகின்றனர். அட்டை பதிவிற்கு தனியாரிடம் ஒப்பந்த பணி வழங்கப்பட்டுள்ளது.சின்னாளபட்டியில் முகாமில் பணம் வசூல் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது,என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement