Load Image
Advertisement

நீரில் மூழ்குபவர்களை மீட்க உபகரணங்கள் இல்லாத அவலம்



திருப்புவனம்---சிவகங்கை மாவட்டத்தில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்பதற்கு போதிய உபகரணங்கள் இல்லாமல் தீயணைப்பு நிலைய வீரர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

தமிழகம் முழுவதும் மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. குளிக்க, மீன்பிடிக்க, வழிதவறி சென்று நீர்நிலைகளில் மூழ்கி சிலர் உயிரிழக்கின்றனர். அவர்களை மீட்க வரும் தீயணைப்பு வீரர்களுக்கு போதிய உபகரணங்கள் இருப்பதில்லை. இதனால் உயிரிழந்தவர்களின் உடல்களை மீன் உள்ளிட்டவை சேதப்படுத்திய நிலையில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கழித்தே மீட்கப்படுகிறது.

திருப்புவனம் அருகே தட்டான்குளம், சயனாபுரம் உள்ளிட்ட இடங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மூன்று நாட்கள் கழித்துதான் மீட்கப்பட்டன.

தீயணைப்பு நிலையங்களில் நீருக்கடியில் தேட வசதியாக பிராணவாயு சிலிண்டர் பொருத்திய உடைகள், போதிய பயிற்சி பெற்ற வீரர்கள் இல்லை. அழுகிய உடல்களை கண்டு உறவினர்கள் அழுவது பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது.

மாவட்ட தீயணைப்பு அலுவலர் சத்யகீர்த்தி கூறுகையில்: சென்னையில் மட்டும் இதற்கான வீரர்கள் உள்ளனர்.

தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் சிக்கியவர்களை மீட்பதற்கான பயிற்சி விரைவில் வழங்கப்பட்டு மாவட்ட வாரியாக நியமிக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது, என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement