Load Image
dinamalar telegram
Advertisement

அரசு கல்லுாரி மாணவர்கள் ஹாக்கி அணிக்கு தேர்வு



காரைக்குடி-அழகப்பா அரசு கலைக்கல்லுாரி மாணவர்கள், அழகப்பா பல்கலை., ஹாக்கி அணிக்கு தேர்வாகியுள்ளனர்.

அழகப்பா பல்கலை., கல்லூரிகளுக்கு இடையேயான ஹாக்கி போட்டி அழகப்பா கல்வியியல் கல்லுாரியில் நடந்தது.

இப்போட்டியில் அழகப்பா அரசு கலை கல்லுாரி மாணவிகள் அணி இரண்டாம் பரிசையும், மாணவர்கள் அணி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

இதில் விளையாடிய ஐந்து மாணவிகள் சென்னையில் நடைபெறும் தென் மண்டல பல்கலை., இடையேயான ஹாக்கிப் போட்டிக்கு அழகப்பா பல்கலை., அணி சார்பில் விளையாட தேர்வாகியுள்ளனர். மாணவர்கள் நான்கு பேர் டிசம்பரில் பெங்களூரு பல்கலை.,யில் நடைபெறும் தென் மண்டல பல்கலை., இடையேயான ஹாக்கிப்போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளனர்.

மாணவ, மாணவிகளை கல்லூரி முதல்வர் பெத்தாலட்சுமி, உடற்கல்வி இயக்குனர் அசோக்குமார் பாராட்டினர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement