அரசு மருத்துவமனைக்கு வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மானாமதுரை,-மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்.கம்யூ., ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் தண்டியப்பன், நகரச் செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தினமும் 800-க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வந்து செல்கின்ற நிலையில் தேவையான டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும், சி.டி ஸ்கேன் இல்லாமல் இருப்பதினால் நோயாளிகள் சிவகங்கைக்கும், மதுரைக்கும் அலைக்கழிக்கப் படுவதாகவும், மற்றும் விபத்து சிகிச்சை மையம் செயல்படாமல் உள்ளதால் மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்படும் நோயாளிகள் பலர் பலியாகி வருவதால் உடனடியாக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை தமிழக அரசு செய்து கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!