Load Image
dinamalar telegram
Advertisement

கால்நடைகளை ரோட்டில் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்



இளையான்குடி,--இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகளை ரோட்டில் விடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பேரூராட்சி செயலாளர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாக இளையான்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கால்நடைகள் வளர்ப்பவர்கள் அதனை தங்களது வீட்டில் வைத்து பராமரிக்காமல் ரோட்டில் விட்டு விடுவதால் அனைத்து பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஏராளமான அமைப்பினர் பேரூராட்சித் தலைவர் நஜூமுதீனிடமும், பேரூராட்சி அலுவலகத்திலும் புகார் தெரிவித்து வருகின்றனர். இனி வரும் நாட்களில் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கால்நடைகளை வளர்ப்பவர்கள் அதனை வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும்.

அதையும் மீறி ரோட்டில் விட்டால் கால்நடைகளை பறிமுதல் செய்து அதன் உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement