Load Image
dinamalar telegram
Advertisement

ஊரக வளர்ச்சித்துறை  போராட்டம் வளர்ச்சி பணிகள் பாதிப்பு



சிவகங்கை,-சிவகங்கை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையினர் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக சிறு விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றதால் ஒன்றிய அலுவலகங்கள் முற்றிலும் முடங்கி பாதிப்பு ஏற்பட்டது.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 11 அம்ச கோரிக்கைகளான பதவி உயர்வு வழங்குதல், ஊராட்சி செயலருக்கு காலமுறை ஊதியம் கருவூலகம் மூலம் வழங்குதல், பணி நெருக்கடியை கைவிடக் கோருதல், இரவு நேர ஆய்வுக்கூட்டங்களை கைவிடுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நவ., 23, 24ல் சிறு விடுப்பு போராட்டம் நடத்தினர்.

சிவகங்கை, மானாமதுரை, இளையான்குடி, காளையார் கோவில், திருப்புவனம், காரைக்குடி, திருப்புத்துார், சிங்கம்புணரி, எஸ்.புதுார் உட்பட அனைத்து ஒன்றிய அலுவலகங்களிலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சிறு விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றதால் ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement