Load Image
dinamalar telegram
Advertisement

கால்வாய் உடைப்பால் வராத தண்ணீர் கருகும் அபாயத்தில் 500 ஏக்கர் நெற்பயிர்

Tamil News
ADVERTISEMENT


சிங்கம்புணரி,- -சிங்கம்புணரி அருகே முல்லை பெரியாறு கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாய் சேதமடைந்ததால் வந்து சேரவில்லை. இதனால் 500 ஏக்கர் நெற்பயிர் கருகும் அபாயம் உள்ளது.

7 வது பிரிவு பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் அக். 15 ல் தண்ணீர் திறக்கப்பட்டது. சிங்கம்புணரி அருகே உள்ள சில நீர் நிலைகளுக்கு மட்டும் தண்ணீர் வருகிறது. 5வது கிளை கால்வாயில் 3வது மடைக்கு உட்பட்ட பாசன கால்வாய் சீரமைக்கப்படாததால் அப்பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை.

இதனால் குமரிக்கண்மாய், தலைவணங்கான் கண்மாய், வரட்டு புதுக்குளம், உசிலம் கண்மாய், தேசம்குலம் கண்மாய், ஐந்து நிலை ஊரணி உள்ளிட்டவற்றில் போதுமான தண்ணீர் இல்லை.

இக்கால்வாய்க்குட்பட்ட 2500 ஏக்கர் பாசன பகுதியில் 500 ஏக்கரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.

கதிர் பிடிக்கும் நிலையில் கண்மாய்களில் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை உள்ளது.

எனவே உடனடியாக கால்வாயை சீரமைத்து தண்ணீரைக் கொண்டு வர விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எம்.முத்து ராமலிங்கம், விவசாயி, குமரிபட்டி: நீண்ட காலத்திற்கு பிறகு இப்போது தான் 5வது கால்வாயில் தண்ணீர் வந்துள்ளது.

இதை நம்பி 500 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ளோம். கண்மாய் தண்ணீர் குறைந்துவிட்ட நிலையில் கால்வாய் தண்ணீர் வந்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும். உடனடியாக போர்க்கால அடிப்படையில் கால்வாயை சீரமைத்து கண்மாய்களுக்கு தண்ணீரை கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement