Load Image
dinamalar telegram
Advertisement

மக்கள் தொடர்பு திட்ட முகாம்



முதுகுளத்துார்,--முதுகுளத்துார் அருகே கீழத்தூவல் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டம்முகாம் ஆர்.டி.ஓ., அப்தாப் ரசூல் தலைமையில் நடந்தது.

தாசில்தார் சிவக்குமார்,சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். முகாமில் ரூ.2.80 லட்சம் மதிப்பீட்டில் முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை உதவித்தொகை இலவச வீட்டுமனை பட்டா உட்பட 38 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பின், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு உள்ளிட்டவைகளுக்காக 220க்கும் மேற்பட்டோர் மனுக்கள் அளித்தனர்.

மண்டல துணை தாசில்தார் மீனாட்சி சுந்தரம், ஊராட்சி தலைவர் சாத்தாயி, வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன், வட்ட வழங்கல் அலுவலர் கதிரவன், தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement