Load Image
dinamalar telegram
Advertisement

மரத்தடி நிழலில் பாடம் படிக்கும் மாணவர்கள்



முதுகுளத்துார்,-முதுகுளத்துார் அருகே இளஞ்செம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 70க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இக்கட்டடம் சேதமடைந்ததால் உயர்நிலை பள்ளி கட்டடத்தில் பள்ளி செயல்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஆபத்தான தொடக்கப்பள்ளி கட்டடத்தை இடித்தனர்.

அதன் பின் இதுவரை புதிய கட்டடம் கட்டப்படவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு வகுப்பறை கூரை இடிந்து விழுந்தது. அப்போது மாணவர்கள் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தற்போது தொடக்கப்பள்ளிக்கு வகுப்பறை வசதி இல்லாததால் மாணவர்கள் மரத்தடி நிழல் மற்றும் வளாகத்தில் உள்ள நிழலில் அமர்ந்து படிக்கின்றனர்.

இதனால் மழை, வெயில் காலத்தில் சிரமப்படும் நிலை உள்ளது. வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர். தற்போது புதிய கட்டடம் கட்டும் வரை மாற்று கட்டடத்தில் வகுப்பறை நடத்துவதற்கு வசதி ஏற்படுத்த வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement