Load Image
dinamalar telegram
Advertisement

சத்துணவு மையங்களில் மத்திய குழுவினர் ஆய்வு

Tamil News
ADVERTISEMENT


பரமக்குடி- பரமக்குடியில் உள்ள அனைத்து நகராட்சி பள்ளிகளிலும் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் விவரம் குறித்து, மத்திய உயர் மட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

எமனேஸ்வரம், ஜீவா நகர் நகராட்சி தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும் சென்றனர். மத்திய குழுவை சேர்ந்த அனாரிடிடா, நூன்மெல்ஸ், ரேவதி ஆகியோர் வந்திருந்தனர். சுகாதாரம், உணவு வழங்கும் விதம், சத்து குறைவான மாணவர்களின் விவரம், தினசரி உணவுப் பொருட்களின் அளவு, ஒரு மாணவருக்கு வழங்கப்படும் உணவு மற்றும் விலை விபரம், குடிநீர் மற்றும் முதலுதவி குறித்து கேட்டறிந்தனர்.

இவர்களை மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து பள்ளியில் மாணவர்களுடன் சத்துணவு சாப்பிட்டனர். நகராட்சி இன்ஜினியர் மீரா அலி, சத்துணவு உதவியாளர் ராஜேஸ்வரி, நேர்முக உதவியாளர் ரோஜா, கணக்கு அலுவலர் காளிமுத்து, உதவியாளர்கள் உலகநாதன், சிவகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement