Load Image
Advertisement

இவர்களாவது... தமிழை வளர்ப்பதாவது! எல்லாம் வேஷம்!

 இவர்களாவது... தமிழை வளர்ப்பதாவது! எல்லாம் வேஷம்!
ADVERTISEMENT

உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:



பேராசிரியர் எஸ்.ஆர்.ராமகிருஷ்ண சாஸ்திரி, கோவையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழ் வாழ்க! தமிழ் வளர்ப்போம்! ஹிந்தி திணிப்பை எதிர்ப்போம்!' என்று, தமிழுக்கான ஏகபோக உரிமையாளர்களாக தங்களைத் தாங்களே பறைசாற்றிக் கொள்ளும் திராவிட செம்மல்கள், தங்களின் பிள்ளைகளை படிக்க வைப்பதோ, ஆங்கில வழி கல்வியில் தான். அவர்களின் மகன்களும், மகள்களும் ஹிந்தி மொழியை கற்பதற்கு எந்தவிதமான தடையுமில்லை.

கடந்த, 2019 லோக்சபா தேர்தல் நேரத்தில், தமிழகத்தின் தற்போதைய நீர்வளத் துறை அமைச்சரான துரைமுருகன், வேலுார் தொகுதியில் போட்டியிட, தன் மகன் கதிர் ஆனந்துக்கு, 'சீட்' கேட்டு போராடிப் பெற்றார். அதற்கு அவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

'என் மகன் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில், லோக்சபாவில் சரளமாகப் பேசுவான்' என்பது தான். ஹிந்தியையே தாய் மொழியாகக் கொண்ட பலர் இருக்கும் லோக்சபாவில், அவ்வாறு பேச முடியுமானால், அவரின் மகனுக்கு எந்த அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்?
Latest Tamil News
அதே சமயம் சாமானியன் ஒருவன், ஹிந்தி மொழியை கற்றுக்கொண்டு விட்டால், அவன் வளர்ந்து விடுவானே என்று, தி.மு.க.,வினர் நினைக்கின்றனர். அத்துடன், மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தலைவர்களான பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றோர், இங்கு ஹிந்தியில் உரையாற்றினால், தமிழக மக்கள் தெள்ளத்தெளிவாக அதை புரிந்து கொண்டு விடுவர்.

அப்படி நடந்தால், நம்முடைய பித்தலாட்டங்கள், சுலபமாக வெளிச்சத்திற்கு வந்து விடும். அதன்பின் தங்களின் ஆட்டம் குளோஸ் ஆகி விடும் என்றும் அஞ்சுகின்றனர். அதேநேரத்தில், 'தமிழ்... தமிழ்...' என வார்த்தைக்கு வார்த்தை பேசுவதால் மட்டும், இவர்கள் பெரிய்ய தமிழ்ப் புலவர்களா என்ன... அது தான் இல்லை!

அய்யம்பெருமாள் கோனார், வாரியார் சுவாமிகள், ரா.பி.சேதுப்பிள்ளை, மு.வரதராஜனார், பண்டித மணி கதிரேசன் செட்டியார், அவ்வை துரைசாமி பிள்ளை, ம.பொ.சிவஞானம் போன்ற சான்றோர் தமிழுக்குச் செய்யாத தொண்டையா, திராவிட செம்மல்கள் செய்து விட்டனர்.

'பொதிகை' தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை காலை, 9:௦௦ மற்றும் இரவு, 11:௦௦ மணிக்கு, 'தமிழ்த் தேன் சுவைத்தேன்' என்ற அருமையான தமிழ் நிகழ்ச்சி நடைபெறுகிறது. உண்மையிலேயே தமிழின் மீது பற்றும், அதை வளர்க்கும் ஆர்வமும் இருந்தால், முதல்வர் ஸ்டாலின் தங்களுக்கு சொந்தமான தொலைக்காட்சி சேனல்களில், ஓய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்களின் உதவியுடன், தினமும் சங்க இலக்கியங்கள் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்த ஆவன செய்யலாமே! ஆனால், அப்படி, செய்ய மாட்டார்கள்.

ஏனெனில் இவர்கள், சந்தர்ப்பவாத தமிழ் வியாபாரிகள். இவர்கள் நடத்தும் சேனல்களிலேயே, செய்தி வாசிப்பாளர்கள் பலருக்கு, ல, ழ, ள போன்றவற்றை உச்சரிக்க திராணி இல்லை. இவர்களாவது தமிழை வளர்ப்பதாவது... எல்லாம் வேஷம்!


வாசகர் கருத்து (88)

  • g.s,rajan - chennai ,இந்தியா

    இன்றைய அரசியல்வாதிகள் தமிழை வளர்க்கிறேன் பேர்வழி என்று கூறிக்கொண்டு தமிழை குழிதோண்டிப் புதைக்கிறார்கள் ,அதே போல சாதியை ஒழிக்கிறதாக சொல்லிக் கொண்டு சாதிகளை வளர்க்கிறார்கள். எரிகின்ற கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல சாதித் தீயை தூபம் போட்டு நன்கு கொழுந்து விட்டு எரியச் செய்கின்றனர்

  • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

    தமிழை வைத்து சொத்து சேர்ப்பதே திராவிட மாடல். இவர்கள் ஒழுங்காக தமிழை உச்சரித்தாலே போதும். தமிழை யாரும் வளர்க்க தேவையில்லை.தமிழால் வளர்ந்தவர்களே அதிகம். உடனே கட்டுமரம் குடும்பம் ஞாபகத்தில் வருமே.....

  • Dhana Vel -

    0 ..........

  • கே.சுரேந்திரன் - Udaipur,இந்தியா

    இவர்களால் தமிழ் மொழியின் மேன்மையை உலகத்திற்கு என்றுமே எடுத்து காட்ட இயலாது. காரணம் இந்த திராவிட கட்சிகள் தமிழ் மொழியை சிறப்பாக வளர்க்க எந்த ஒரு முயற்சியையும் இதுவரை செய்ததில்லை, இனியும் செய்ய மாட்டார்கள். மொழி என்பது இவர்களால் வெறும் ஒரு அரசியல் ஆதாயத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம் மட்டுமேயன்றி வேறோன்றுமில்லை. நண்பர் மொழிந்ததுபோல் வெளி வேஷம் மட்டும்தான்.

  • Duruvesan - Dharmapuri,இந்தியா

    கர்த்தரின் சீடர் விடியல் சார் பட்டம் பெற்றது லயோலா என்ற தூய தமில் கல்லூரியில், குடும்ப தொழில் நிறுவனங்கள் சன் tv, சன் rise ஸ்கூல், ரெட் jeyant movies தூய தமில் பெயரில், சொந்த பெயர் தூய தமில், அப்பால திராவிட மாடல் தூய தமில், ஆக கர்த்தர் விடியலை ஆசீர்வதிப்பாராக, ஆமென்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement